புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2015

ரணிலுக்கே அதிகளவு ஆதரவு காணப்படுகின்றது!– கருத்துக் கணிப்பு


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கே அதிகளவு ஆதரவு காணப்படுவதாக மாற்றுக்கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் கருத்துக் கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை விடவும்,  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகளவு ஆதரவு காணப்படுவதாக தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறுபான்மை இன சமூகத்தவர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக தெரிவு செய்யப்படுவார் என தெரிவித்துள்ளனர்.
சிங்கள இன சமூகத்தவர்கள் மஹிந்த ராஜபக்ச தோதலில் வெற்றியீட்டி பிரதமராக நியமிக்கப்படுவார் என கருத்து வெளியிட்டுள்ளனர்.
சிங்கள இன சமூகத்தில் 36 வீதமானவர்கள் மஹிந்த பிரதமராவார் எனவும், 31.9 வீதமானவர்கள் ரணில் விக்ரமசிங்க பிரதமராவார் எனவும் தெரிவித்துள்ளனர்.
இலங்கைத் தமிழர்களில் 62.3 வீதமானவர்களும், மலையகத் தமிழர்களில் 71.1 வீதமானவர்களும், முஸ்லிம்களில் 62.3 வீதமானவர்களும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக தெரிவு செய்யப்படுவார் என கருத்துக் கணிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் சுயாதீனமான முறையில் நடைபெறும் என 66.9 வீதமானவர்கள் கருதுகின்றனர்.
மஹிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிட்டிருக்கக் கூடாது என 42 வீதமான இலங்கையர்களும்,  போட்டியிட வேண்டுமென 40 வீதமானவர்களும் கருத்து வெளியிட்டுள்ளதாக மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் கருத்துக் கணிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ad

ad