புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2015

பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது.


சென்னையில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகளை தடுக்கும் பொருட்டு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது.
சென்னை முழுவதும் பெரும்பாலும் ஹொட்டல்கள் மற்றும் திருமண விழாக்களில்தான் அதிக அளவில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன.
டெல்லிக்கு அடுத்தபடியாக பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் உள்ள நகரமாக சென்னை மாறி வருகிறது. மேலும், மாசு நிறைந்த 476 நகரங்களில் 61-வது இடத்திலும் சென்னை உள்ளது.
இதனை தடுக்கும் நோக்கில், 40 மைக்ரான்களுக்கும் குறைவான பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பைகளை சென்னையில் பயன்படுத்த இன்று முதல் தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பொதுமக்கள் சுற்று சூழலை கருத்தில் கொண்டு துணிப்பைகள் அல்லது காகித பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 40 மைக்ரான்களுக்கு குறைவாக அளவுள்ள பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் தொடர்பான பொருட்களுக்கு எதிரான இந்தத் தடை அமலுக்கு வந்துள்ளது.
இதேபோன்று, மதுரையில் 40 மைக்ரான்களுக்கு குறைவான பிளாஸ்டி பைகளை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
மதுரை மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் துணை ஆணையர் சாந்தி தலைமையில் 4 குழுக்கள் திடீர் ஆய்வு செய்து 40 மைக்ரானுக்கும் குறைவான 1,950 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பைகளைக் கைப்பற்றியுள்ளனர்.

ad

ad