புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2015

தற்போதைய செய்தி ,,மதுவிலக்கு கோரி செல்போன் கோபுரங்கள் மீது ஏறி நின்று இளைஞர்கள் போராட்டம்

 

தமிழகத்தில் முழுவதும் திறக்கப்பட்டு உள்ள டாஸ்மாக் கடைகளை மூடி, மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என பொதுமக்களும், அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. 

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடையில் இருந்த டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தில், காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து மதுவிலக்கு கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த மணி (வயது 21) என்ற வாலிபர், சென்னை மடிப்பாக்கத்தில் வேலை செய்து வருகிறார். அவர் நேற்று காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் தெருவில் உள்ள 28 மீட்டர் உயர செல்போன் கோபுரத்தில் ஏறினார்.

கோபுரத்தின் உச்சியில் இருந்தபடி அவர், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடவேண்டும் என்று கோரிக்கை விடுத்து தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இது குறித்து தகவல் அறிந்ததும் பெரிய காஞ்சீபுரம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் காஞ்சீபுரம் தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் வாகனமும் வரவழைக்கப்பட்டது.

அந்த வாலிபரை கீழே இறங்கி வருமாறு போலீசார் வலியுறுத்தினர். நீண்ட நேரத்துக்குப்பின் அவர் கீழே இறங்கி வந்தார். உடனே அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அந்த வாலிபர் குடிபோதையில் இருந்ததாகவும் தெரிகிறது.

வேலூர் மாவட்டம் ஆற்காடு நக்கீரன் தெருவை சேர்ந்த சந்தோஷ் (21) என்ற கல்லூரி மாணவர், அண்ணா சிலை அருகில் உள்ள 70 அடி உயர மின் வாரிய உயர் கோபுரம் மீது தேசிய கொடியுடன் ஏறினார். 

60 அடி உயரத்தில் ஏறி நின்று கொண்டு அவர், தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என ஆவேசமாக குரல் எழுப்பினார். உடனே அங்கு கூடிய பொதுமக்கள் சந்தோஷை கீழே இறங்கும்படி சொல்லி கூச்சலிட்டனர். 

இது குறித்த தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் மாணவர் சந்தோசிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் கீழே இறங்க வைத்தனர். பின்னர் அவர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.

குமரி மாவட்டம் ஆற்றூர் சந்திப்பில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளை அகற்றக்கோரி அந்த பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

த.மா.கா. சார்பில் சாகும் வரை உண்ணாவிரத போராட் டம் தொடங்கப்பட்டது

இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்து நடந்தது. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த டேவிட் (35) என்பவர் திடீரென அருகில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறினார். அவர், கோபுரத்தின் முக்கால் உயரத்துக்கு மேல் ஏறிய நிலையில் மதுகடைகளை அகற்ற கோரி கோஷம் எழுப்பினார். அத்துடன், அங்கிருந்த நிலையில் தற்கொலை மிரட்டல் விடுத்தார். 

பின்னர் தீயணைப்பு படையினர் செல்போன் கோபுரத்தில் ஏறி டேவிட்டை மீட்டு கீழே இறக்கி கொண்டு வந்தனர்.

இதற்கிடையே போராட்டக்காரர்கள் பொதுமக்களுடன் இணைந்து ஒரு டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். டாஸ்மாக் கடை ஷட்டரை இழுத்து மூட முயன்றனர். உடனே, போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அவர்கள் நாலாபுறமும் கலைந்து ஓடினர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

பின்னர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரையும் போலீசார் கைது செய்து திருவட்டார் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.  மேலும் ஆற்றூர் சந்திப்பு, அப்பகுதியில் உள்ள செல்போன் கோபுரங்கள் மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

ad

ad