புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஆக., 2015

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கட்சியில் இருந்து இடைநீக்கம்


அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட், கட்சியில் இருந்து
இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் ஒழுக்கத்தை மீறிய குற்றச்சாட்டில் அவரை கட்சியின் அதியுயர் பீடம் நீக்கியுள்ளதாக ரிசாத் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் தலைமையின் எச்சரிக்கையை புறக்கணித்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வந்ததன் காரணமாக ஹமீட் கட்சியில் இருந்து இடைநீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அகில இலங்கை மக்கள் காங்கிஸ் கட்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வழங்காதது குறித்து ஹமீட் அந்த கட்சி மீது அதிருப்தி அடைந்திருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிஸூக்கு இரண்டு தேசியப்பட்டில் ஆசனங்களை வழங்குவதாக உறுதியளித்திருந்துடன் இறுதி ஒரு ஆசனத்தை மாத்திரம் வழங்கியதாகவும் இதனால், ஹமீட் நாடாளுமன்றத்திற்கு தெரிவாக முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தை மாத்திரம் வழங்கியதால், ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது புதிய கூட்டணி அரசாங்கத்துடனோ எந்த பிளவும் ஏற்படவில்லை என அமைச்சர் ரிசாத் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.
ஹமீட் அறியுறுத்தல்களை மீறி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் கூட்டணி கட்சிக்கு எதிராக அதிருபதியையும் கருத்துக்களையும் வெளியிட்டு வந்தார்.
இதன் காரணமாகவே அவரை பதவியில் இருந்தும் கட்சியில் இருந்து இடைநிறுத்தியதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

ad

ad