புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஆக., 2015

மஹிந்த ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தோல்வி உறுதி.த்தபாய ராஜபக்ச நாட்டை விட்டு செல்ல ஆயத்தம்


பொதுத் தேர்தல் அண்மித்துள்ள நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நாட்டை விட்டு செல்ல ஆயத்தமாவதாக மிகவும் நம்ப தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அவன்கார்ட் கடல் பாதுகாப்பு நிறுவனம் ஊடாக சட்டவிரோத ஆயுத பரிமாற்றங்கள் நடாத்தில் செல்வது தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதனை தடுப்பதற்காக கோத்தபாய ராஜபக்ச உட்பட மூன்று பேருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் போது மூன்று பேருக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை ஒரு மாதத்திற்கு தளர்த்துமாறு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மூன்று பேர் தாக்கல் செய்திருந்த மனுக்களை ஆராய்ந்த பின்னர் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை ஒரு மாதத்திற்கு நீக்குவதாக காலி பிரதான நீதவான் நீலபுலி லங்காபுர நேற்று அறிவித்தார்.

மஹிந்த ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தோல்வி உறுதியாகியுள்ளமை மற்றும் மஹிந்தவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படாமை உறுதியாகியுள்ளமையினாலே தேர்தலுக்கு சில தினங்களே உள்ள நிலையில் கோத்தபாய ராஜபக்ச நாட்டை விட்டு செல்லவுள்ளார் என தெரியவந்துள்ளது.

ad

ad