புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஆக., 2015

சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைப்பதனை தடுப்பதற்கு மஹிந்த தரப்பு புதிய சூழ்ச்சி


ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் அரசாங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற
நாடாளுமன்ற உறுப்பினர் குழுவொன்று அவற்றில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விதுர விக்ரமநாயக்க மற்றும் தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மேலும் 4 பேர் உறுப்பினர்கள் உறுதியாக கூட்டணியில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதியுடன் மேலும் ஒரு குழு விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு கிடைப்பதனை தடுப்பதற்காக இக் குழுவினர் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்று கொள்வதற்கு திட்டமிட்டு வருவதாகவும் அரசியல் தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளது.
எனவே சுதந்திரக் கட்சி பிளவடைவது உறுதி எனவும், ஜனாதிபதிக்கு நெருங்கிய பெரும்பான்மையினருடன் ஐக்கிய தேசிய கட்சி வலுவான அரசாங்கத்தை உறுவாக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ad

ad