புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஆக., 2015

திரு. சித்தார்த்தன் ஆரம்பித்து வைத்த புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வகுப்புக்கள்



யாழ். ஏழாலை மேற்கு சைவசன்மார்க்க அறநெறி பாலர் முன்பள்ளியில் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது வழிகாட்டலின்கீழ்
திரு. சே.ஞானசபேசன் அவர்களின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் வசிக்கும் திரு. வே.மணிவண்ணன் அவர்களது அனுசரணையுடன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களிற்கான இலவச புலமைப் பரிசில் பரீட்சை வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக ஏழாலை மேற்கில் நடைபெற்ற இம்முறை ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகள் கடந்த 13.08.2015 அன்று நடைபெற்றபோது திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்களும் பெருமளவில் கலந்துகொண்டிருந்தார்கள்.நன்றி அதிரடி  

ad

ad