புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2015

இராணுவத்தினர் வசம் உள்ள புலிகளின் வாகனங்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு


விடுதலைப் புலிகள் அமைப்பினரிடம் இருந்து இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை உடனடியாக தயாரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன இராணுவ அதிகாரிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
குறித்த வாகனங்கள் சட்ட விரோதமான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாகவும், எதிர்வரும் தேர்தலின் போது அவ்வாகனங்கள் வன்முறை சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் புலனாய்வு பிரிவு ஊடாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதனால் குறித்த வாகனங்களுக்கு பட்டியல் ஒன்று தயாரித்து அதனை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.
இதற்கு முன்னர் நுகேகொட, மிரிஹான பிரதேசத்தில் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவினால் தனது தனிப்பட்ட நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட இவ்வாறான வெள்ளை வேன் ஒன்று காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சட்டத்திற்கமைய இவ்வாறு விடுதலை புலிகள் அமைப்பு பயன்படுத்தி வாகனங்கள் உட்பட அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றில் சமர்பித்த பின்னர் நீதி அமைச்சின் செயலாளர் ஊடாக அவசியம் என்றால் பாதுகாப்பு பிரிவுகளுக்கு பயன்படுத்த முடியும்.
எனினும் இராணுவதின் உயர் அதிகாரிகள் பெரும்பான்மயினர் இவ்வாறு கைப்பற்றிய வாகனங்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தாது பயன்படுத்தியுள்ளனர்.
கடந்த காலங்களில் நபர்களை கடத்தி செல்வதற்காக பயன்படுத்திய வெள்ளை வான்களின் அதிகமானவைகள் இவ்வாறு விடுதலை புலிகள் அமைப்பினால் பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எப்படியிருப்பினும் சட்ட விரோதமாக புலிகள் பயன்படுத்திய வாகனங்களை இராணுவத்தினர் பயன்படுத்துவது தொடர்பில் தொடர்ந்து ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட போதிலும், தற்போதைய அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தி நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை

ad

ad