புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2015

சமஷ்டி முறைமை உருவாக்கப்பட வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்பு தேவை : சம்பிக்க ரணவக்க

சமஷ்டி முறைமை உருவாக்கப்பட வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்பு தேவை. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் அவசியம். எனவே, 10 முதல் 15 ஆசனங்களைக் கொண்டுள்ள
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இதைச் செய்யமுடியாது.சமஷ்டி முறைமை என்பது 1949ஆம் ஆண்டு முதல் கனவு மாளிகை மட்டுமே. - இவ்வாறு அமைச்சரும் ஐக்கிய தேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
 
நேற்று கொலன்னாவை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் உரையாற்றுகையிலே,
 
நாட்டைப் பிரிக்கும் யோசனை கொண்டு வரப்படுவதாக ராஜபக்‌ஷ தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், நாட்டைப் பிரிக்கும் யோசனையைக் கொண்டு வந்ததே மஹிந்த ராஜபக்‌ஷவின் அருகில் இருக்கும் ஜீ.எல்.பீரிஸ்தான்.
 
 அந்த யோசனை எம்மால் தோற்கடிக்கப்பட்டதால் நாட்டில் அவ்வாறானதொரு அபாயம் இடம்பெறவில்லை. இன்று ஜனாதிபதியும், பிரதமரும் ஐக்கியத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். 
 
அதேபோல மஹிந்த ராஜபக்‌ஷ கூட ஏற்றுக்கொண்டுள்ளார். சமஷ்டி முறைமை வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 1949 முதல் பேசி வருகிறது. அது கனவு மாளிகை மட்டுமே. சமஷ்டி முறைமையை ஏற்படுத்த வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்பு அவசியமாகும். 
 
நாட்டின் நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் அவசியம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதைச் செய்ய முடியாது. நாம் இருக்கும் வரை நாட்டைப் பிரிக்க இடமளிக்கமாட்டோம். அரசியல் மறுசீரமைப்புதான் எமது அடுத்த நடவடிக்கை. தொகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கும் விருப்பு வாக்கு முறைமையை நீக்கி 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டுவருவோம். அடுத்த நாடாளுமன்றத்தில் நாட்டின் சுதந்திரத்தை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்றார். 

ad

ad