புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஆக., 2015

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எனக்கு ஒத்துழைப்பு தருவது குறைவு! கூட்டமைப்பு வேட்பாளர் சாந்தி


தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் எனக்கு ஒத்துழைப்பு தரவில்லை. ஆனால்  தமிழரசுக் கட்சி எனக்கு முழு ஒத்துழைப்பை தருகின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்
சார்பில் வன்னியில் போட்டியிடும் வேட்பாளர் சி.சாந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
 நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஒரு பெண் வேட்பாளராக யுத்த சுமைகளை சுமந்தவள் என்ற வகையில் கூட்டமைப்பில் நான் போட்டியிடுகின்றேன்.
எனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு தமிழரசுக் கட்சி எனக்கு முழு ஒத்துழைப்பு தருகிறது. குறிப்பாக வடமாகாண சுகாதார அமைச்சர் மற்றும் வன்னியில் போட்டியிடும் வேட்பாளர் றோய் ஜெயக்குமார் ஆகியோர் எனக்கு ஒத்துழைப்பு தருகிறார்கள்.
இருந்த போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் அவ்வளவாக ஆதரவு தரவில்லை. பெண் வேட்பாளர் போட்டியிடுகின்றார். அவர் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவள்.
அரச அதிகாரியாக இருந்தவள் என்பதை அவர்கள் வெளிப்படுத்தவில்லை. எனக்கு செல்வாக்கு உள்ள இடத்தில் அவர்கள் கூட்டுச் சேர விரும்புகிறார்கள்.
ஆனால் ஏனைய இடங்களுக்கு என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்த கூட்டமைப்பினர் தயாராகவில்லை.
எனக்கு ஆதரவு அதிகரிப்பதை கூட்டமைப்பினர் பெரிதாக விரும்பவில்லை எனவும்  சாந்தி தெரிவித்துள்ளார்.

ad

ad