புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2015

இளங்கோவனுக்கு எதிரான போராட்டம் ஜனநாயகத்திற்கு எதிரானது - நடிகை குஷ்பு

IST

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிரான போராட்டம் ஜனநாயகத்திற்கு எதிரானது என்று நடிகை குஷ்பு கூறிஉள்ளார். 

கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற தேசிய நெசவாளர் தின விழாவில், பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு அ.தி.மு.க.வினர் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கண்டிக்கும் வகையில், அவரது உருவ பொம்மையை அதிமுகவினர் சென்னையில் 15 இடங்களில் எரித்தனர். அக்கட்சியின் சார்பில் தொடர்ந்து போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 

ஜனநாயகத்திற்கு எதிரானது  

இந்நிலையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர், நடிகை குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்பேசுகையில், அ.தி.மு.க.வின் தவறுகளை கண்டறிந்து இளங்கோவன் வெளியிட்டு வந்தார். அவர்களுடைய தவறு வெளியாகிவிட கூடாது என்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. அவர்கள் பயத்தினால் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். எங்களுக்கு ஜனநாயகம் மீது நம்பிக்கை உள்ளது. ஆனால் அவர்கள் அராஜகமாக நடந்துக் கொள்கின்றனர். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிரான போராட்டம் ஜனநாயகத்திற்கு எதிரானது. 

காங்கிரஸ் கட்சியின் போராட்டம் மக்களுக்கு நல்லது செய்யவே, தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளை திசைதிருப்பவே அ.தி.மு.க.வினரால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. என்று கூறினார். இளங்கோவன் தவறாக பேசவில்லை என்று கூறிஉள்ள குஷ்பு, பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதா சந்திப்புதொடர்பாக விளக்கம் அளிக்கவேண்டும் என்று கூறிஉள்ளார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சுக்கு பாரதீய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. அ.தி.மு.க.கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. 

மன்னிப்பு கேட்க வேண்டும் அ.தி.மு.க. வலியுறுத்தல்

இதனையடுத்து செய்தி தொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலம் பேசிய அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், கடும் கண்டனம் தெரிவித்தார். தேசத்தின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அவரது இலத்திற்கு சென்று சந்தித்துபேசியதை காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கொச்சை படுத்தியது அரசியல் அநாகரீகமானது. இது அரசியல் அநாகரீயகத்தின் உச்சம் ஆகும். நாவை காக்கவேண்டும் என்பது இளங்கோவனுக்கும் சேர்த்துதான். 

இளங்கோவன் பேச்சு அறுவறுக்கதக்கது. அவருடைய தாயை மதித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை, கொச்சைப்படுத்துவது எப்படி, இதனை நியாயப்படுத்தினால் ஏற்றுக் கொள்ளமுடியாது. மன்னிப்பு கேட்க வேண்டும். இளங்கோவன் மன்னிப்பு கேட்கும் வரையில் ஓயமாட்டோம். என்று கூறிஉள்ளார். 

கூட்டணி குறித்து அவர்கள் பேசினாலும், இப்படி பேசவேண்டுமா? என்று கேள்வி எழுப்பிஉள்ள நாஞ்சில் சம்பத் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறிஉள்ளார். இளங்கோவன் காங்கிரஸ் தலைவராக நீடிப்பது என்பது அவமரியாதையானது, அவரை கட்சி தலைமை உடனடியாக நீக்கவேண்டும் என்று கூறிஉள்ளார். குஷ்பு பேட்டி குறித்து பேசிய நாஞ்சில் சம்பத், அ.தி.மு.க.விற்கு எதிரான இளங்கோவன் பேச்சை ஒருபொருட்டாகவே நினைக்கவில்லை. பெண்மையும், தாய்மையும் பெரியதாக மதிக்கும் இந்நாட்டில் திருமணத்திற்கு முன்னதாக உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்று கூறிய குஷ்புவின் கருத்து இப்படிதான் இருக்கும் என்று கடுமையாக தாக்கிஉள்ளார்.  

டி.ஜி.பி.யிடம் புகார்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிரான டி.ஜி.பி.யிடம் பாரதீய ஜனதா தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டி.ஜி.பி.யை சந்தித்து பாரதீய ஜனதா தலைவர் ஹெச்.ராஜா மனுவை கொடுத்து உள்ளார். இளங்கோவன் பேச்சுக்கு தமிழக பாரதீய ஜனதா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துஉள்ள தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழசை சவுந்தரராஜன் பாரதீய ஜனதா தரப்பில் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துஉள்ளார். 

பாரதீய ஜனதா போராட்டம்

இளங்கோவன் பேச்சை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். பிரதமர் மோடி மற்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இடையிலான சந்திப்பு மக்களுக்கானது. இதுதொடர்பாக அ.தி.மு.க. மற்றும் பாரதீய ஜனதா தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டு விட்டது. இதற்கு பிறகும் கொச்சைப்படுத்தும் விதமாக பேசியது கண்டிக்கத்தக்கது. இவ்வளவு கொச்சைப்படுத்தும் விதமாக பேசுமுடியும் என்றால் யாராலும் அரசியலில் ஈடுபடமுடியாது. குறிப்பாக பெண்கள். இருவரையும் நாட்டு தலைவர்களாக பார்க்கவேண்டுமே தவிர இதுபோன்ற வார்த்தையை பேசுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழக மக்கள் கொதித்து எழுந்து உள்ளனர். இளங்கோவனின் நாகரீகமற்ற, கீழ்த்தரமான பேச்சை எதிர்த்து எங்களது கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும். 

நாளை பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் தமிழக முழுவதும் போராட்டம் நடத்தப்படும். மக்கள் விரோத செயலில் ஈடுபடும் காங்கிரஸ் மத்திய தலைமைக்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழசை தெரிவித்து உள்ளார். திசைதிருப்புவதற்கானது என்று யார் எதைபேசினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது, இளங்கோவன் பேசியது தவறு, அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் தலைவர்களுக்கும் கடும் கண்டனம். என்று தமிழசை குறிப்பிட்டு உள்ளார். 

ad

ad