புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2015

தேசியப் பட்­டியல் உறுப்­பினர் விவ­கா­ரத்தால் எழுந்த சர்ச்சை;ஒற்றுமை அவசியம்

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தேசியப் பட்­டியல் உறுப்­பி­னர்கள் நிய­ம­ன­மா­னது கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் மத்­தியில் பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.
கடந்த 17 ஆம் திகதி நடை­பெற்ற பாரா­ளு­மன்ற பொதுத்­தேர்­தலில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் பெரும்­பான்மை வாக்­கு­களைப் பெற்று 14 உறுப்­பி­னர்­களை பெற்­றி­ருந்­தது. இத­ன­டிப்­ப­டையில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்கு இரண்டு தேசிய பட்­டியல் ஆச­னங்கள் வழங்­கப்­பட்­டி­ருந்­தன.
இந்த இரு தேசிய பட்­டியல் உறுப்­பி­னர்கள் நிய­ம­னங்கள் தொடர்பில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தலை­மையில் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்கள் ஒன்று கூடி ஆராய்ந்­தி­ருந்­தனர். திரு­கோ­ண­ம­லையில் இரு தட­வைகள் இத்­த­கைய சந்­திப்­புக்கள் இடம்பெற்­றன. இதன் போது தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புௌாட் ஆகிய கட்­சி­களின் சார்பில் ஒரு­வரை நிய­மிக்க­வேண்­டு­மென்றும் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் சார்பில் மற்­றை­ய­வரை நிய­மிக்க வேண்­டு­மெ­னவும் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது.
கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் யாழ். மாவட்­டத்தில் போட்­டி­யிட்ட கூட்­ட­மைப்பின் கூட்­டுக்­கட்­சி­யான ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலை­வரும் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ள­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தோல்­வியை தழு­வி­யி­ருந்தார். இவ­ருக்கு தேசிய பட்­டி­யலில் நிய­மனம் வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்று அக்­கட்­சி­யினர் உட்­பட பல பொது அமைப்­புக்­களும் வேண்­டுகோள் விடுத்­தி­ருந்­தன. இதேபோல் கூட்­ட­மைப்பின் யாழ். மாவட்­டப்­பட்­டி­யலில் போட்­டி­யிட்­டி­ருந்த அருந்­த­வ­பா­லனும் தோல்­வி­ய­டைந்­த­தாக அறி­விக்­கப்­பட்­டது. இந்த விட­யத்தில் விருப்பு வாக்கில் மோசடி செய்­யப்­பட்­ட­தாக அவ­ரது ஆத­ர­வா­ளர்கள் குற்றம் சாட்­டி­வந்­தனர்.
இதனால் அருந்­த­வ­பா­ல­னையும் தேசிய பட்­டி­யலின் மூலம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நிய­மிக்­க­வேண்­டு­மென்றும் கோரிக்கை எழுந்­தி­ருந்­தது. திரு­கோ­ண­ம­லையில் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் இல்­லத்தில் முதல்நாள் நடை­பெற்ற கூட்­டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ்­ பி­ரே­மச்­சந்­தி­ரனை தேசிய பட்­டி­யலில் நிய­மிக்­க­வேண்­டு­மென்ற கோரிக்கை எழுந்­தி­ருந்­தது. ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புௌாட் ஆகிய மூன்று கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து ஒரு­வ­ரது பெயரை தரு­மாறு கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் கோரி­யி­ருந்தார். ஆனாலும் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரனை தேசிய பட்­டியல் மூலம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக்­கு­வ­தற்கு இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைமை விரும்­ப­வில்­லை­யென்ற குற்­றச்­சாட்டும் தற்­போது எழுந்­தி­ருக்­கி­றது.
இந்த நிலையில் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ கட்­சி­யினர் ஒன்று கூடி தமது சார்பில் கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­க­ளான என். சிறி­காந்தா, எம்.கே. சிவா­ஜி­லிங்கம், ஹென்றி மகேந்­திரன், கோவிந்தன் கரு­ணா­கரம் (ஜனா) ஆகிய நால்­வரில் ஒரு­வரை தேசிய பட்­டி­ய­லுக்கு நிய­மிக்­கு­மாறு கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­த­னிடம் கடிதம் மூலம் கோரி­யி­ருந்­தனர்.
உண்­மை­யி­லேயே தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பேச்­சா­ள­ரா­கவும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கவும் விளங்­கிய சுரேஷ்­ பி­ரே­மச்­சந்­திரன் இம்­முறை தோல்­வியை தழு­வி­யமை கவ­லைக்­கு­ரிய விட­ய­மா­கவே உள்­ளது. இந்த நிலையில் கூட்­ட­மைப்பின் கூட்­டுக்­கட்­சி­களின் தலைவர் ஒருவர் தோல்­வி­ய­டைந்த நிலையில் அவரை தேசியப் பட்­டி­யலில் நிய­மித்­தி­ருந்தால் கூட்­ட­மைப்­பிற்குள் நல்­லெண்ணம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும். ஆனால் அவ்­வா­றான செயற்­பாடு அர­சியல் போட்டா போட்டி கார­ண­மாக இடம் பெற­வில்­லை­யென்றே தெரி­கின்­றது.
தற்­போ­தைய நிலையில் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் தமி­ழ­ர­சுக்­கட்சி தவிர்ந்த ஏனைய மூன்று கட்­சி­களும் தேசிய பட்­டியல் விட­யத்தில் ஒரு நிலைப்­பாட்­டிற்கு வரா­மை­யி­னா­லேயே தமி­ழ­ர­சுக்­கட்சி உறுப்­பி­னர்­களை நிய­மிக்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டது என்று கூட்­ட­மைப்பின் தலைமை காரணம் கூறும் சூழ்­நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.
உண்­மை­யி­லேயே ரெலோ, புௌாட், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சி­களின் தலைமை ஒரேபிடி­யாக ஒரு­வரை நிய­மிக்­க­வேண்­டு­மென்று கோரி­யி­ருந்தால் அந்தக் கோரிக்­கைக்கு தமி­ழ­ர­சுக் ­கட்­சியின் தலைமை செவி­சாய்க்­க­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டிக்கும். ஆனால் அந்த விட­யத்தில் இந்த மூன்று கட்­சி­களும் ஒன்­றி­ணைய தவ­றி­விட்­டன.
இந்த நிலையில் தற்­போது திரு­கோ­ண­ம­லையில் கூட்­ட­மைப்பின் பட்­டி­யலில் போட்­டி­யிட்டு தோல்­வி­ய­டைந்­தி­ருந்த கே. துரை­ரட்­ண­சிங்­கமும், வன்னி மாவட்­டத்தில் போட்­டி­யிட்டு தோல்­வி­ய­டைந்­தி­ருந்த திரு­மதி சாந்தி ஸ்ரீஸ்­கந்­த­ரா­ஜாவும் கூட்­ட­மைப்பின் சார்பில் தேசிய பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக நியமிக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்கள் இரு­வ­ருமே தமி­ழ­ர­சுக்­கட்­சியை சேர்ந்­த­வர்கள் என்­ப­தனால் இந்த நிய­மனம் தொடர்பில் கூட்­ட­மைப்பின் தலை­மைகள் மத்­தியில் பெரும் அதி­ருப்தி நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. அது தற்­போது ஊட­கங்கள் வாயி­லாக பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தையும், காணக்­கூ­டி­ய­தாக உள்ளது.
தேசிய பட்­டி­ய­லுக்­கான உறுப்­பி­னர்கள் நிய­ம­ன­மா­னது தமிழ்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பின் முடி­வல்ல. அது தன்­னிச்­சை­யா­கவும், ஒரு தலை­ப்பட்­ச­மா­கவும், தமி­ழ­ர­சுக்­கட்­சி­யினால் எடுக்­கப்­பட்ட முடி­வாகும் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சியின் தலை­வரும், கூட்­ட­மைப்பின் பேச்­சா­ள­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் குற்றம் சுமத்­தி­யுள்ளார்.
யாழ். மாவட்­டத்தில் போட்­டி­யிட்ட நான் தோல்­வி­ய­டைந்­தை­யடுத்து தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­லி­ருக்கும் ஒரு கட்­சியின் தலை­வ­ரான எனக்கு தேசிய பட்­டி­யலில் இட­ம­ளிக்­க­வேண்­டு­மென கூட்ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் மற்றும் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்­சி­களின் தலை­வர்­க­ளிடம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. ஆயினும் அந்தக் கோரிக்கை தொடர்பில் சரியான முடிவு எடுக்­கப்­ப­டாமல் தமி­ழ­ர­சுக்­கட்சி தனது விருப்­பத்­திற்கு இரண்டு­பேரை தேசியப் பட்­டியல் உறுப்­பி­னர்­க­ளாக நிய­மித்துள்ளது. இத்­த­கைய முடிவு கூட்­ட­மைப்பின் தத்­து­வங்­க­ளுக்கு நல்ல­தல்ல. இதனை மிகவும் வெட்­கம்­கெட்­ட­த­ன­மாக தமி­ழ­ர­சுக்­கட்சி செய்துள்ளது என்றும் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் விமர்­சித்­துள்ளார்.
இவ்­வாறு இந்த விமர்­ச­னத்­திற்கு பதி­ல­ளித்­துள்ள தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் பிரே­மச்­சந்­தி­ர­னுக்கு பதில் கூற­வேண்­டிய அவ­சியம் எனக்­கில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணத்­திற்கு தேசிய பட்­டி­யலில் ஒவ்­வொரு இடம் வழங்­கு­வது என்று முடிவு செய்­யப்­பட்­டது. கூட்­ட­மைப்பின் சார்பில் பெண்­ணொ­ருவர் பாரா­ளு­மன்றம் செல்ல வேண்­டு­மென்றும் முடிவு செய்­யப்­பட்­டது. இதற்­கி­ணங்­கவே தேசிய பட்­டியல் நிய­ம­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன என்று கூறி­யுள்ளார்.
இவ்­வாறு தேசியப் பட்­டியல் விவ­கா­ரத்தில் கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் பகி­ரங்­க­மாக கருத்­து­மோ­தலில் ஈடு­படும் நிலை உரு­வா­கி­யி­ருக்­கி­றது. கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புௌாட் ஆகிய கட்­சி­களின் தலை­வர்­களும் இந்த நிய­மன விட­யத்தில் கடும் எதிர்ப்­பையே தெரி­வித்­துள்­ளனர்.
உண்­மை­யி­லேயே தமிழ் கட்­சிகள் தமிழ் கூட்­ட­மைப்­பாக ஒன்­றி­ணைந்து நிற்­ப­த­னா­லேயே தமிழ் மக்கள் தமிழ்த் ­தே­சி­யக்­கூட்­ட­மைப்­பிற்கு தமது பெரும்­பான்­மை­யான ஆத­ர­வினை வழங்­கி­வ­ரு­கின்­றனர். 2001 ஆம் ஆண்டு தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு ஆரம்­பிக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து நடை­பெற்று வரும் ஒவ்­வொரு தேர்­தலிலும், அதற்­கான ஆணை­யினை வடக்கு, கிழக்கு மக்கள் வழங்­கியே வரு­கின்­றனர்.
இந்த நிலையில் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­மைகள் வெறு­ம­னே தேர்தல் அர­சியல் மற்றும் சுய­நல அர­சியல் செயற்­பா­டு­களை விடுத்து மக்களின் நலன் கருதி பொதுவான செயல்முறையின் அடிப்படையில் செயற்படவேண்டும். தமிழ் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்யவேண்டுமென்ற கோரிக்கை பலமாக எழுந்த போதிலும், அதற்கான நடவடிக்கைகளும் இன்னமும் எடுக்கப்படவில்லை. தற்போது தேசிய பட்டியல் நியமன விடயத்தில் பெரும் முரண்பாடு ஏற்பட்டு விட்டது.

ad

ad