புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஆக., 2015

சிறுபான்மையினரை அழித்து குடும்ப அரசியலைக் கொண்டுவரத் துடிக்கிறார் மகிந்த: சந்திரநேரு சந்திரகாந்தன்


ஏகாதிபத்தியத்தையும் பேரினவாதத்தையும் கட்டிக்கொண்டு அரியாசனத்தில் அமர்வதற்காக மகிந்த ராஜபக்ஷ துடித்துக் கொண்டிருக்கின்றார். அதன்மூலம் சிறுபான்மையினரை அழித்து தன்னுடைய குடும்ப அரசியலை கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றார் என கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.
இன்று கல்முனையில் உள்ள அவரது தேர்தல் காரியாலயத்தில் வைத்து ஊடகவியலாளருக்கு விளக்கமளிக்கும் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
மகிந்தவின் ஆட்சிகாலத்தில் என்னால் அவரது உறுதிமொழிக்கமைவாக சரணடைந்த போராளிகளுக்கு என்ன நடந்ததென நான் மகிந்தவிடம் கேட்க வேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் அவரது இணைப்பாளராக இருந்து கொலை, கொள்ளை செய்த இனியபாரதிக்கு தண்டணை பெற்றுக்கொடுக்க வேண்டும் போன்ற முக்கிய விடயங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே நாம் முக்கியமான தேர்தலை எதிர்கொண்டுள்ளோம். அவ்வாறானதொரு தேர்தலை எதிர்கொள்ளும் போது வானூர்திகளில் மக்களை அழைத்துச் சென்று சுற்றிகாட்டி மக்களின் வாக்கைப்பெற சிலர் எத்தனிக்கின்றனர்.
இந்நடவடிக்கையானது முற்றிலும் தேர்தல் சட்டவிதிகளுக்கு முரனானது. அவர்களுக்கொரு சட்டம், எங்களுக்கொரு சட்டமா இந்த நாட்டில் நிலவுகின்றது எனும் ஆதங்கத்தினையும் இங்கு அவர் வெளிப்படுத்தினார்.
வானூர்திகளில் மக்களை அழைத்துச்சென்று சுற்றிகாட்டுவதால்; மட்டும் உரிமை கிடைத்துவிடாது. முதலில் தமிழ் பிரதேசங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுங்கள். அதன் பின்னர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுங்கள் என்றார்.
மகிந்தவின் ஆட்சியை மாற்றி மைத்திரியை கொண்டு வருவதற்காக அனைவரும் ஒன்றாக இணைந்து பாடுபட்டோம். மக்களின் தீர்ப்பும் அதுவாகவே அமைந்தது. ஆனால் இன்று எங்களுக்குள்ளே பிளவை ஏற்படுத்த இதுபோன்ற செயற்பாடுகள் காரணமாக அமையும் என குறிப்பிட்டார்.

ad

ad