புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2015

தயாநிதியை கைது செய்ய முயற்சிப்பதற்கு அரசியல் பின்னணி காரணமா? சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி


முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை கைது செய்ய முயற்சிப்பதற்கு அரசியல் பழிவாங்கும் பின்னணி காரணமா என்று சிபிஐக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து உச்சநீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.தாகூர், கோபால்கவுடா, பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. 

அப்போது தயாநிதி மாறன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவார், விசாரணைக்காக சிபிஐ எப்போதெல்லாம் அழைத்ததோ, அப்போதெல்லாம் தயாநிதி மாறன் ஆஜராகி முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், தேவையான ஆவணங்களுடன் 4 முறை சிபிஐக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தொலைபேசி இணைப்பு தவறாகப் பயன்படுத்தப்படவில்லை என்று வாதாடினார். எனவே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரினார். 

ஆனால் இதற்கு மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், 2013ஆம் ஆண்டு இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, இதுவரை சிபிஐ என்ன நடவடிக்கை எடுத்தது. தயாநிதி மாறன் பயன்படுத்தியதாக கூறப்படும் தொலைபேசி இணைப்புக்கு மீட்டர் பொருத்தப்பட்டதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு முகுல் ரோத்தகி, இல்லை என்று பதிலளித்தார். 

அப்போது, எந்த அடிப்படைடியில் ஒரு கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொலைபேசி இணைப்பு எதற்காக பயன்படுத்தப்பட்டது என்பதை பிஎஸ்என்எல் அதிகாரிகளையோ, தொழில்நுட்ப நிபுணர்களையோ கேட்டாலே தெரிந்துவிடும் அல்லவா என்று நீதிபதிகள் கேட்டனர்.

மேலும், கட்டணத்தை செலுத்த தயராக இருக்கும்போது, காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன. ஒரு கோடி ரூபாய் பாக்கியை செலுத்த தயாராக இருக்கும்போது, அதை வசூலிக்க நடவடிக்கை எடுக்காமல், அவரை கைது செய்ய சிபிஐ துடிப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று நீதிபதிகள் கூறினர். 

உத்திரப்பிரதேசத்தில் ரூபாய் 8 ஆயிரம் கோடி ஊழல் ஏற்படுத்திய வழக்கில் இதுவரை ஒருவரைக் கூட கைது செய்யாதது ஏன்? அரசு இல்லங்களை காலி செய்ய மறுப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? தயாநிதி மாறனை கைது செய்ய முயற்சிப்பதற்கு அரசியல் பழிவாங்கும் பின்னணி காரணமா? தயாநிதி மாறனை கைது செய்வதை கவுரவப் பிரச்சனையாக சிபிஐ கருதக் கூடாது. தவறு நடந்திருந்தால் அவரை விசாரிக்கலாமே தவிர, கைது செய்ய முனைவது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

பொருளாதார குற்ற வழக்குகளில் முன்ஜாமீனை மறுப்பது ஏன்? இதற்கு சிபிஐ இரண்டு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தயாநிதி மாறனின் முன் ஜாமீனை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து விசாரணையை வரும் செப்டம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

ad

ad