புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2015

நாகாலாந்து கிளர்ச்சி குழுக்களுடன் மத்திய அரசு சமாதான உடன்படிக்கை


















நாகலிம் என்ற பெயரில் தனி நாடு கேட்டு நாகலாந்தில் கடந்த 60 ஆண்டுகளாக கிளர்ச்சி குழுக்கள்  போராடி வந்தன. இதனால், கிளர்ச்சி குழுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் ஏற்பட்ட  மோதலால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த நிலையில், 60 ஆண்டு கால இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், நாகலாந்து கிளர்ச்சி குழுக்களுடன் மத்திய அரசு இன்று சமாதான உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நேஷனல் தேசிய சோஷியலிஸ்ட் அமைப்பின் முய்வே சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.  இந்த உடன்படிக்கை பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம்  மூலம் 60 ஆண்டு காலமாக நடைபெற்ற தனிநாடு  போராட்டத்திற்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பதம் இது. இந்த ஒப்பந்தம் நிறைவேற உதவியவர்களுக்கு நன்றி.  60 ஆண்டு கால அரசியல் பிரச்சினைக்கு ஒப்பந்தம் மூலம் தீர்வுஏற்பட்டுள்ளது. நாகலாந்தில் அமைதி நிலவ இந்த ஒப்பந்தம் உதவும். நாகலாந்தில் அரசியல் ரீதியாக சண்டை காரணமாக ஏராளமானோர் இறந்துள்ளனர்.  எதிர்பாரத விதமாக நாகலாந்து பிரச்சினை நீண்ட காலாமாக நீடித்து வருகிறது. இதற்கு காரணம் பிரிட்டிஷ் ஆட்சி. நான் பொறுப்பெற்ற பிறகு தனிக்கவனம் செலுத்தி இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அமைதி முயற்சிக்கு நாகலந்த் மக்கள் பெரும் ஆதரவு அளித்தனர்” என்று தெரிவித்தார். 

பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ மந்திரி மனோகர் பாரீகார், ராணுவ தளபதி பிக்ராம் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ad

ad