புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2015

தேர்தல் களத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்? புதிய ஆய்வுத் தகவல் வெளியீடு

பொதுத் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு ஆய்வு அறிக்கைக்கு அமைய ஐக்கிய தேசிய முன்னணி 12 மாவட்டங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 08 மாவட்டங்களில் வெற்றிபெறும் எனவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு மேலதிக மாவட்டங்களில் பெரும்பான்மையை பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்விற்கமைய மேல் மாகாணத்தில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி எனவும் களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெறும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தென் மாகாணத்தில் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த போட்டியின் பின் முன்னணி வெற்றிபெறும். மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய 3 மாவட்டங்களில் ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மேல் மாகாணத்தில், புத்தளம் மாவட்டத்தை ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெறும் எனவும், குருணாகல் மாவட்டத்தில் பலத்த போட்டி ஒன்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தை ஐக்கிய தேசிய முன்னணியும், மொனராகலையில் முன்னணியும் வெற்றி பெறும்.
கிழக்கு மாகாணத்தில், அம்பாறை மற்றும் திருகோணமலையில் ஐக்கிய தேசிய முன்னணியும், மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெறும். சப்ரகமுவ மாகாணம், கேகாலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியும், இரத்தினபுரி மாவட்டத்தில் முன்னணியும் வெற்றி பெறும்.
வவுனியா மற்றும் மன்னாரில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு சாதகமான நிலை காணப்படுவதாகவும், வடக்கின் அதிகாரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலைமையினுள் 113 ஆசனங்களை பெற்று கொள்வதற்கான வாய்ப்புகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு இருந்தாலும், மக்கள் விடுதலை முன்னணி உட்பட ஏனைய கட்சிகளுக்கு கிடைக்கும் வாக்குகளுக்கமைய அவற்றில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

ad

ad