புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஆக., 2015

ராஜபக்ச மற்றும் குடும்பத்தின் ஊழலை நேருக்கு நேர் அம்பலப்படுத்த தயார் : நளீன் பண்டார

 
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தாரின் ஊழல் மோசடிகளை நேருக்கு நேர் அம்பலப்படுத்த தயாரெனவும், அதற்கு நாமல் ராஜபக்ச தம்முடன்
நேரடி விவாதத்திற்கு வரவேண்டுமெனவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார்.
 
சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற அம்பலப்படுத்தல் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
‘நாமல் ராஜபக்ஷவின் வருமானத்தை வைத்து பார்த்தால், அவரால் எவ்வாறு ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் உரிமையாளராக முடியுமென்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
 
அதுமட்டுமன்றி அவரது பெயரில், ‘கவர்ஸ் கோப்பரேட் சர்விசஸ்’ என்னும் தனியார் நிறுவனமும் உள்ளது.
அத்துடன் கடந்த 2012ஆம் ஆண்டு ‘ஹெலோ கோப்’ என்னும் பெயரில் 12 கோடி ரூபாவுக்கு இன்னுமொரு நிறுவனத்தையும் விலைக்கு வாங்கினார். இவ்வளவு பணம் நாமல் ராஜபக்ஷவுக்கு எங்கிருந்து கிடைத்தது? மக்களின் பணத்தை ஊழல் மோசடி செய்தே நாமல் ராஜபக்ஷ இவ்வளவு பணத்தை திரட்டியிருப்பாரென என்னால் பகிரங்கமாக குற்றம் சுமத்தமுடியும். அவர் அதை மறுப்பாராயின் என்னுடன் நேரடி விவாதத்திற்கு வருமாறும் நான் அவரை அழைக்கின்றேன்.
 
ஜனாதிபதி தேர்தலில் தோற்கப் போவதையறிந்து நாமல் ராஜபக்ஷ தனது மூன்று லம்போகினி கார்களையும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களில் ஏற்றி மலேசியாவுக்கு அனுப்பியமை தற்போது தெரியவந்துள்ளது. 
 
அந்த கார்கள்இ மலேசியாவிலுள்ள குடு ராஜாவான முஜாவின் வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளன. இந்த குடு ராஜாவின் வாகன அனுமதிப் பத்திரத்தைக் கொண்டே நாமலும் யோசித்தவும் மலேசியாவில் கார்ப் பந்தயத்தில் கலந்துகொண்டனர்.
 
மஹிந்த ராஜபக்ஷவின் மூன்று புதல்வர்களும் 2,3 இலட்சங்கள் பெறுமதியான சப்பாத்துக்களையே அணிந்தனர். 10, 15 இலட்சங்கள் பெறுமதியான கைக்கடிகாரங்களையே உபயோகித்தனர். 
 
ஆனால் பல பிள்ளைகள் பாடசாலை செல்வதற்கு இரண்டு சப்பாத்துகள் வாங்க பணம் இல்லாமல் தற்கொலை செய்துகொண்டனர்.
 
ராஜபக்ஷவினர் அவர்களது பிள்ளைகளுக்கு பணத்தை திருட கற்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல், நாட்டின் ஏனைய இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் வகையில் நாட்டிற்குள் போதைவஸ்து கொண்டுவரவும் இடமளித்துள்ளனர்’ என இதன்போது குறிப்பிட்டார்.
-

ad

ad