புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2015

பஷில் - கஜேந்திரகுமார் உடன்படிக்கை என்ன? - கேள்வி எழுப்புகிறார் மாவை!









இறுதிக்கட்டப்போரில் விடுதலைப் புலிகள் சரணடைய எடுக்கப்பட்ட முயற்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய எமக்குத் தெரியாமல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பஷில் ராஜபக்சவுடன் பேசியுள்ளார்.
ஆனாலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. பசிலும் கஜேந்திரகுமாலும் செய்துகொண்ட உடன்பாட்டை இப்போது வெளிப்படுத்துவாரா?
இனப்படுகொலை தொடர்பில் ஐ.நா சபையிடம் எத்தகைய வாக்குமூலத்தை கஜேந்திரகுமார் கொடுத்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்துவாரா?
என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் மாவை சேனாதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
மாலுசந்திப் பகுதியில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாவையைத் தோற்கடிக்கவேணும்,சம்பந்தனைத் தோற்கடிக்கவேணும், சுமந்திரனைத் தோற்கடிக்கவேணும் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் சில பேர். தமிழ்த் தேசியக் கூட்மைப்பு அரசாங்கத்தோடு குறிப்பாக ராஜபக்சவோடு, இரகசிய தொடர்புகளைப் பேணிவருவதாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர் சிலர்,
நாடாளுமன்ற கூட்டத் தொடர்களின்போது தேனீர் இடைவேளைகளில் நாங்கள் ஒரு மூலையிலிருக்கும் போது மகிந்த எங்களைகத் தேடிவந்து உரையாடினார்,
அதைப்படமாக்கிய சிலர் தற்போது நாங்கள் மகிந்த அரசுடன் இணைந்து செயற்பட்டதாக விசமப்பிரசாரங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
வேட்பாளர் ஒருவர் தேர்தலில் போட்டிடுமுன்னர் வேட்புமனுத் தாக்கல் செய்யும் போதே ஆறாவது திருத்தத்தின் சரத்துக்களை ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்டே தேர்தலில் போட்டியிடவேண்டும்.
அதேபோன்று பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டாலும் அரசியல் சாசனத்துக்கு கட்டுப்பட்டே செயற்பட வேண்டும்.
அப்படியிருக்கையில் தமிழ்த் தேசியக மக்கள் முன்னணி புதிதாக மக்களுக்கு எதைப் பெற்றுக் கொடுக்கப்போகிறது? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்கிறது என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
காணி விடுவிப்பு சம்பந்தமாக பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக கடந்தவருடம் ஐயாயிரம் பேரைத்திரட்டி வழக்குத் தொடுக்கும் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம்.
அதன் ஊடாக சுமந்திரன் ஊடாக இரண்டாயிரத்து நூற்று எழுபத்தாறு வழக்குகள் தாக்கல் செய்துள்ளோம். நீதிகோரி நிலத்தை விடிவிப்பதற்காக அந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதேபோன்று சமுர்த்திப் பயனாளிகளின் நிதிக்கையாளுகை தொடர்பிலான வழக்கும் தாக்கல் செய்துள்ளோம். அந்த வழக்கு மூலம் அரசின் நடவடிக்கை தடுக்கப்பட்டது.
அந்த வழக்கின் பிற்பாடே ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி சிராணி பண்டாரநாயக்கவை பதவிலியிருந்து நீக்கினார்.
தமிழரசுக்கட்சி சமஸ்டியைக் கோரிவரும் நிலையில் அந்தக் கட்சியை தடைசெய்யவேண்டும் எனவும் எனவும் கடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை தொடர்பாகவும் பொதுபலசேனா உட்பட சிங்கள வழக்கறிஞர்களால் எமக்கு எதிராக 08 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நாங்கள் சர்வதேச ஒத்துழைப்புடன் உள்ளக சுயநிர்ணய உரிமையை இலங்கை நாட்டுச்சட்டத்தின் அடிப்படையில் கோரிவருகிறோம் இதனை தென்னிலங்கை சக்திகள் தற்போதும் தவாறவே புரிந்துகொண்டுள்ளன. சமஸ்டி என்பது தனிநாட்டுக்கோரிக்கையாகவே அவர்கள் கொள்கின்றனர்.
கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரண்டு தேசம் ஒரு நாடு என்று கூறிவருகிறது. இதில் ஒரு நாடு என்பது உங்களுடைய அப்பாவின் கொள்கையா?
அல்லது ஒற்றையாட்சியா? அல்லது சமஷ்டியா? அல்லது கூட்டாட்சியா? இவை எவை என்று தெளிவற்ற நிலையில் இரு தேசம் ஒரு நாடு என்று மக்கள் முன்னணியினர் பிதற்றுகின்றனர்.
இரண்டு தேசம் என்றால் சுயநிர்ணய உரிமை தேவையற்றதா? நீங்கள் இரண்டு தேசம் என்பது சுயநிர்ணய உரிமையைப் பற்றியதா?
இரண்டு நாடுகளைப் பற்றியதா? இவை எவையுமே தெளிவற்றவை. இறுதிக்கட்டப்போரில் விடுதலைப்புலிகள் சரணடைய எடுக்கப்பட்ட முயற்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய எமக்குத் தெரியாமல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பஷில் ராஜபக்சவுடன் பேசியுள்ளார்.
ஆனாலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. பசிலும் கஜேந்திரகுமாலும் செய்துகொண்ட உடன்பாட்டை இப்போது வெளிப்படுத்துவாரா?
இனப்படுகொலை தொடர்பில் ஐ.நா சபையிடம் எத்தகைய வாக்குமூலத்தை கஜேந்திரகுமார் கொடுத்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்துவாரா? என்றும் மாவை சேனாதிராஜா கேள்வி எழுப்பினார்.

ad

ad