புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஆக., 2015

தற்போதைய செய்தி www.pungudutivuswiss.com விமான விபத்தில் பின்லேடன் குடும்பத்தினர் பலியாகினர் திட்டமிட்ட சதியா





இங்கிலாந்து நாட்டில் நடந்த தனியார் ஜெட் விமான விபத்தில் பின்லேடன் குடும்பத்தினர் பலியாகினர். பின்லேடன் குடும்பத்தினர் சாவுக்கு காரணமான விமான விபத்தில் சதி நடந்துள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான வாஷிங்டன் பென்டகன், நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின் மீது கடந்த 2001 செப்டம்பர் 11-ந் தேதி விமானங்களை மோதி அதிபயங்கர தாக்குதல்கள் நடத்தி 3 ஆயிரம் பேரை கொன்று குவித்த அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் பின்லேடன். இவர், பாகிஸ்தானில் அப்போட்டாபாத் என்ற இடத்தில் பதுங்கி இருந்தபோது 2011-ம் வருடம், மே 2-ந் தேதி அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஒசாமா பின்லேடனின் சித்தி ராஜா ஹஷிம், சகோதரி சானா, சானாவின் கணவர் ஜூஹைர் ஹஷிம் ஆகியோர் விடுமுறையை கழிப்பதற்காக இத்தாலியின் மிலன் நகரில் இருந்து இங்கிலாந்தில் உள்ள ஹாம்ஷயர் நகருக்கு கடந்த 31–ந் தேதி, ‘எம்ப்ரேர் பினோம்–300’ ஜெட் விமானத்தில் வந்து கொண்டிருந்தனர். விமானத்தை ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த விமானி ஓட்டினார்.

அந்த விமானம் ஹாம்ஷயர் பிளாக்புஷி விமான நிலையத்தில் தரை இறங்க வந்தபோது, அதன் அருகேயுள்ள கார்கள் ஏலமிடும் இடம் ஒன்றில் மோதி தீப்பற்றி எரிந்தது. இதில் விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் பலியாகினர். சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்களும் தீக்கிரையாகின.

விபத்துக்குள்ளான விமானம், பின்லேடன் குடும்பத்துக்கு சொந்தமானது, இந்த விபத்து குறித்து ஹாம்ஷயர் போலீசார், விமான விபத்து புலனாய்வு பிரிவினருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

7 மில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.70 கோடி) மதிப்புள்ள இந்த விமானம், கார்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானம் விபத்துக்குள்ளானதில் சதி எதுவும் நடந்துள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனெனில் விமானம் விபத்துக்குள்ளானபோது அங்கு வானிலை சீராக இருந்துள்ளது. ஓடுதளம் நல்ல நிலையில் இருந்திருக்கிறது. அந்த விமானம், ‘பிளை பை வயர் எலெக்டிரானிக் சிஸ்டம்’ என்ற நவீன சாதனம் பொருத்தப்பட்டிருந்ததால், எளிதில் விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். அப்படி இருந்தும் விமானம் விபத்துக்குள்ளானது எப்படி என்ற கேள்விக்கு பதில் இல்லை. இதில் மர்மம் நீடிக்கிறது.

இது தொடர்பாக விமானியும், விமான பயிற்றுவிப்பாளருமான சைமன் மூரேஸ் கருத்து தெரிவிக்கையில், ‘‘எளிதாக அந்த விமான நிலையத்தில் வந்து தரை இறங்க முடியும். அப்படி இருக்கும்போது அந்த விமானம், நீளமான ஒரு ஓடு தளத்தை கடந்து அமைந்துள்ள கார்கள் நிறுத்துமிடத்தில் மோதி தீப்பிடித்து எரிந்தது ஏன் என்று புரியவில்லை’’ என கூறினார்.

விமான போக்குவரத்து வல்லுனரான ஜூலியன் பிரே, ‘‘எம்ப்ரேர் பினோம்–300 விமானம், நம்ப தகுந்ததாகும். சம்பவத்தன்று வானிலை நன்றாக இருந்ததால், விமானியின் தவறுதான் விபத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்றுதான் நான் கருதுகிறேன்’’ என கூறினார்.

இதற்கிடையே விமானம் விபத்துக்குள்ளானதின் பின்னணி என்ன என்பது பற்றி இங்கிலாந்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

ad

ad