புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 செப்., 2015

இணுவில் பகுதியில் பரபரப்பு! 18 வயது யுவதியை ஆட்டோவில் கடத்த முயற்சிஇணுவில் அண்ணா தொழிலகத்தில்
வேலை முடித்து விட்டு வீடு திரும்பவிருந்த இளம்பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பலொன்று ஆட்டோவில் கடத்த முயற்சித்த போதும் குறித்த பெண்ணின் துணிச்சலான செயற்பாடு காரணமாக அவர் பாதிப்பு எதுவுமின்றித் தப்பியுள்ளார்.
குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,18 வயதான குறித்த பெண் கடந்த இரண்டு வருடங்களாக மேற்படி தொழிலகத்தில் பணி புரிந்து வருகின்றார்.
நேற்றைய தினமும் வழமை போன்று பணியாற்றி விட்டு வீடு செல்வதற்காக பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த வேளை ஆட்டோவில் வந்த இனந்தெரியாத மூவர் குறித்த பெண்மணியை ஆட்டோவில் கடத்திச் சென்றுள்ளனர். இவ்வாறு கடத்திச் சென்றவர்கள் குறித்த பெண்ணின் வாயினுள் துணியை அடைந்ததோடு ,அவரது கைகளை இருவர் இறுகப் பிடித்தவாறும் சென்றனர்.
இதன் போது சுதாகரித்துக் கொண்ட பெண் அவர்களின் பிடியிலிருந்து தப்பி ஆட்டோவின் வெளியே பாய்ந்துள்ளார்.இதனையடுத்து அப் பகுதிப் பொதுமக்களின் உதவியுடன் தனது வீடு போய்ச் சேர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணைக் கடத்தி வந்தவர்கள் அங்கிருந்து தப்பித்துச் செல்ல முற்பட்ட போதும் அப்பகுதி இளைஞர்கள் சிலர் குறித்த ஆட்டோவைக் துரத்திச் சென்று சம்பவத்துடன் தொடர்புடைய ஆட்டோச் சாரதியைப் பிடித்துத் தாக்கி விட்டுசந்தேக நபரைச் சுன்னாகம் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தப்பியோடிய மற்றைய இரு சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கான விசாரணைகளைச் சுன்னாகம் பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.குறித்த பெண்மணி எதற்காகக் கடத்தப்பட்டார் என்பது குறித்து இதுவரை தெரிய வரவில்லை என அவரது உறவினரொருவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். இதேவேளை குறித்த பெண் இடம்பெயர்ந்து சுன்னாகம் நலன்புரி முகாமொன்றில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ad

ad