புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2015

விடுதலைப் புலிகளின் மரக்குதிரையாக சம்பந்தன் செயற்படலாம்: மஹிந்த தரப்பினர்


இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக ஆர். சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டமையானது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சதுரங்கத்தில் காய்களை நகர்த்த உதவக்கூடும் என்று இந்திய நாளிதழ் ஒன்று எழுதியுள்ளது.
மஹிந்த ராஜபக்சவின் தரப்பில் 55 பேர் கையெழுத்திட்டு முன்னாள் அமைச்சர் குமார வெலகமையை எதிர்க்கட்சி தலைவராக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
எனினும் 16 ஆசனங்களை மாத்திரமே வென்ற, சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக்கப்பட்டுள்ளார்
இந்தநிலையில் இதனைக் கொண்டு மஹிந்த ராஜபக்ச, அரசியலில் மீண்டும் முன்னுக்கு வர முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.
மஹிந்தவின் எண்ணப்படி குமார வெல்கமையை எதிர்க்கட்சி தலைவராக்கினால், அதன்மூலம் மஹிந்த ராஜபக்ச அரசியலில் எதிர்க்கட்சியாக முன்னேற்றம் கண்டு தமக்கு அச்சுறுத்தலாக வந்துவிடுவார் என்று மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் அஞ்சிய காரணத்திலேயே சம்பந்தனின் நியமனத்தை அவர்கள் முன்னிலைப்படுத்தினர்.
இந்தநிலையில் கிரேக்க யுத்தத்தில் ட்ரெஜன் ஹோர்ஸுக்குள் (மரக்குதிரை) இருந்த வீரர்களை போன்று சம்பந்தனும் விடுதலைப் புலிகளின் ட்ரெஜன் ஹோர்ஸாக( குதிரையாக) அல்லது,
புலிகளின் நிழலாகவும் மேற்கத்தைய ஆக்கிரமிப்பாளர்களின் ஆளாகவும் செயற்பட்டு நாட்டை நாசப்படுத்தலாம் என்று மஹிந்தவின் ஆதரவாளர்களான விமல் வீரவன்ச,கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில் எதிர்க்கட்சி தலைவரான சம்பந்தன், தொடர்ந்தும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை மாத்திரம் கதைப்பாரானால் அவர் சிங்கள பெரும்பான்மை மக்களின் ஆதரவை இழக்கக்கூடும் என்று இலங்கையின் அரசாங்க ஆங்கில பத்திரிகை கருத்துக்கூறியுள்ளது.
இது ராஜபக்சவை முன்னிலைப்படுத்தி சிறிசேனவை பிரச்சினைக்கு உள்ளாக்கும் என்றும் அரசாங்கம் பத்திரிகை கருத்துக் கூறியுள்ளது.

ad

ad