புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 செப்., 2015

செல்பி’யால் ஏற்பட்ட விபரீதம் : பரிசல் கவிழ்ந்து ஆறுபேர் பலியான சோகம்



சென்னை, தி.நகர், உஷ்மான் ரோட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, தன் மகள் கோமதியின் திருமண நாளை முன்னிட்டு, குடும்பத்தினர், ஒன்பது பேருடன், நேற்று முன்தினம், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார். இவர்கள், ஒகேனக்கல் பரிசல் துறையில் இருந்து, கஜாமுருகேசன் என்பவரின் பரிசலில், தொம்பச்சி பாறை அருகே பயணம் சென்றனர்.

இரண்டு பக்கமும் தண்ணீர் கொட்டும் பாறைகளுக்கு இடையில் பரிசலில் செல்வது ஒரு சுகமான அனுபவம் தான். ஆனால், இந்த இடத்தில் தண்ணீரின் வேகம் கூடுதலாக இருக்கும். அதனால், பரிசல் ஓட்டிகள் பரிசலில் உள்ள எல்லோரையும் கீழே உட்காரும்படி சொல்லிவிட்டு, பரிசலை சிரமப்பட்டு மேலே கொண்டு போவார்கள்.

அந்த இடத்தில், கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் சென்று கொண்டிருந்த போது, கிருஷ்ண மூர்த்தியின் மருமகன் ராஜேஷ், தன் மொபைல் ஃபோனில், கொட்டும் அருவி தண்ணீர் தனக்கு பின்னால் தெரிவது போன்ற தோற்றத்தில் தனது மொபைல் போன் மூலம்  "செல்பி' எடுக்க பரிசலின் ஓரத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக பரிசல்ஆடியுள்ளது, அப்போது, எதிர் பக்கத்தில் பரிசல் ஓரமாக உட்காந்திருந்த கிருஷ்ணமூர்த்தி நிலை தடுமாறி பரிசலில் இருந்து தண்ணீரில் விழுந்துள்ளார். இதை பின்பக்கமாக இருந்த பார்த்த மற்ற பரிசல் ஓட்டிகள் வேகமாக பரிசலை செலுத்தி, விபத்து நடந்த இடத்துக்கு வரும் முன்னரே பரிசலில் இருந்த, 10 பேரும் தண்ணீரில் மூழ்கினர். மிகுந்த வேகத்துடன் கரை புரண்டு செல்லும் தண்ணீரில், எல்லோரும் மூழ்கிவிட்டனர். இதில், பரிசல் ஓட்டி கஜா முருகேசன் மற்றும் வேறு பரிசலில் வந்தவர்கள், தண்ணீரில் மூழ்கிய ராஜேஷ், அவரது மனைவி கோமதி, அவர்களது மகன் சச்சின் ஆகியோரை மீட்டார். ஆனால், தண்ணீரில் மூழ்கிய, கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி கவுரி, மகன் ரஞ்சித், ரஞ்சித் மனைவி கோகிலா, அவர்களது மகள் சுபிக்ஷா, ராஜேனின் மகன் தர்ஷன் ஆகியோரை காப்பாற்ற முடியவில்லை. இதில், தர்ஷன், கவுரி ஆகியோரது உடல்கள், நேற்று முன்தினம் மீட்கப்பட்டது. மேலும், ஆற்றில் மூழ்கிய மற்ற, நான்கு பேரின் உடலை தேடும் பணி, நேற்று காலை, 6 மணிக்கு துவங்கியது. 60-பரிசல்களில், தொம்பச்சி பாறையில் இருந்து, 40 கிலோ மீட்டர் தூரம் வரை, தேடுதல் வேட்டை நடந்தது.

அப்போது, பாலாறு செல்லும் வழியில் கோபிநத்தம், ஆத்தூர் அருகிலுள்ள  கருங்கல் திட்டு என்னும் இடத்தில், கோகிலாவின் உடலும், மாலை நான்கு மணிக்கு, பாலாறு அருகில் கிருஷ்ணமூர்த்தி உடலும், அங்கிருந்து சற்று தொலைவில், ரஞ்சித் உடலும் மீட்கப்பட்டது. குழந்தை  சுபிக்ஷாவின் உடல் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறது. 

ad

ad