திங்கள், செப்டம்பர் 07, 2015

மெட்ரோ ரெயிலில் பயணம்: பிரதமர் மோடியுடன் செல்பிக்களை எடுத்து கொண்ட பயணிகள்

டெல்லியில் இருந்து செயற்கைக்கோள் நகர் என அழைக்கப்படும் பரீதாபாத்திற்கு செல்லும் பாதர்பூர் மெட்ரோ ரெயில் வழித்தடத்தை நீட்டிக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, அதே ரயிலில் ஏறி பரீதாபாத் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. 

அவர், ஜன்பத் ரெயில் நிலையத்தில் வயலட் வழித்தடத்தில் காலை 10 மணியளவில் மெட்ரோ ரெயிலில் ஏறினார். அது பரீதாபாத்தின் பேட்டா சவுக் நிலையத்திற்கு செல்லும் ரெயில் ஆகும். ரெயிலில் பயணம் செய்த பயணிகள் மற்றும் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் இதனை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். 

வழக்கம்போல் ரெயிலில் செல்லும் பயணிகளுடன் மோடி உரையாடினார்.  அவர்கள் பிரதமருடன் இணைந்து செல்பிக்களை எடுத்து கொண்டனர்.  அவருடன், மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, வீரேந்தர் சிங், ராவ் இந்தர்ஜித் சிங் மற்றும் டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேசனின் தலைவர் மாங்கு சிங் ஆகியோர் பயணம் செய்தனர். அதன் பின்னர் பரீதாபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். 

பிரதமர் மோடி பரீதாபாத் நகரத்திற்கு ஹெலிகாப்டர் ஒன்றில் செல்லவே திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் மார்க்கத்தில் தினசரி 2 லட்சம் பேர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 13.87 கிலோமீட்டர் தொலைவிலான இந்த மார்க்கத்தில் 9 ரயில் நிலையங்கள் உள்ளன.