புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2015

. ஒரு போராட்டக்காரியின் போராட்டம் --------------------------

வாழத்துக்கள்!

ஒரு போராட்டக்காரியின் போராட்டம்
---------------------------------- - 3 ஆம் தேதி தேர்வுக்கு 2 ஆம் தேதி இரவு கடிதம்:
திருநங்கை பிரத்திகா சந்தித்த சவால்!
காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான நேர்காணலில் பங்கேற்க, பிரித்திகா யாஷினியை அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யார் இந்த பிரித்திகா யாஷினி?
சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரித்திகா யாஷினி, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை. ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியவர். பிரித்திகா யாஷினி என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது அதற்கு விண்ணப்பித்தார் பிரித்திகா. திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார் பிரித்திகா.
மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது. அந்த தேர்வில் பிரத்திகா யாசினி கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். அடுத்து நடந்த உடல் தகுதி தேர்வில் ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாக கூறி, பிரித்திகாவை தகுதி நீக்கம் செய்தது சீருடை பணியாளர் தேர்வாணையம்.
இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்திடம் மனு செய்தார் பிரித்திகா. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரை நேர்காணலில் அனுமதிக்க வேண்டும் என கறார் காட்டியது நீதிமன்றம்.
இப்படி தனிமையையும், தீண்டாமையையுமே தங்கள் வாழ்க்கையின் சீதனங்களாக ஏற்று சகித்து வாழ்ந்துகொண்டிருக்கும் அவலம், திருநங்கைகளின் வாழ்வில் எப்போதும் தொடர்கிறது.
விண்ணப்பித்த மறுகணம் முதல் தகுதிச்சுற்றின் கடைசி நொடிவரையில் அலைகழிக்கப்பட்டு, இன்னும் போராடிக்கொண்டிருக்கும் பிரத்திகா என்கிற பிரதீப் குமார், “இப்போது கிடைத்துள்ள நீதிமன்ற உத்தரவு எதிர்காலத்தின் மீது பெரும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது" என்கிறார் கண்களில் நம்பிக்கை வழிய.
“சொந்த ஊர் சேலம். பி.சி.ஏ முடிச்சிருக்கேன். என்னோட இருபதாவது வயசுலதான் நான் ஒரு பெண் என்கிற விஷயம் புரிய ஆரம்பித்தது. அப்பா, அம்மாக்கிட்ட சொன்னதும் அவங்க நம்பலை. டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணினோம். முடிவு பெற்றோருக்கு அதிர்ச்சியா இருந்தது. அவங்களுக்கு தொந்தரவா இருக்க வேண்டாமென்று நானாகவே வீட்டை விட்டு வெளியேறிட்டேன்" என்கிற பிரத்திகாவின் குரலில் சோகம் அப்புகிறது ஒரு நொடி.
தன் வாழ்க்கை திசை மாறியதில் தளர்ந்துவிடாமல் போராட ஆரம்பித்திருக்கிறார் பிரித்திகா. விடுதி வார்டன், தொண்டு நிறுவன ஊழியர், ஹார்மோன் சிகிச்சை ஆலோசகர் என தொடர்ந்த பணிகளுக்கிடையில் தமிழினப்படுகொலைக்கு எதிரான போராட்டம், திருநங்கை திருமணம், வேலை வாய்ப்பு போராட்டங்களையும் முன்னெடுத்து செய்தார்.
நன்றி விகடன்

ad

ad