புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2015

ஐ.நா அறிக்கையை வரவேற்கும் பான்கீ மூன்


ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான்கீ மூன் வரவேற்றுள்ளார்.
ஐ.நா மனித உரிகைகள் ஆணையாளரின் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையை வரவேற்றிருக்கும் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன், இது தொடர்பில் நேற்று ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில் உள்ள பரிந்துரைகள் நிலையான சமாதானம், மனித உரிமை பாதுகாப்பு, பொறுப்புகூறும் தன்மை என்பவற்றிற்கு உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.
போர்க் குற்றம், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றம் ஊடான விசாரணை அவசியம் என்ற பரிந்துரை அதில் முன்வைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தரப்பிற்கும், மக்களுக்கும் நீதி கிடைக்கச் செய்யும் முகமான முழுமையானதும், சரியானதுமாக அமையக்கூடிய பொறுப்புக்கூறலை இலங்கை  அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
அதுமட்டுமன்றி, ஜெனீவா அறிக்கையில் காணப்படுகின்ற பரிந்துரைகள் இலங்கையில்  சர்வதேச தரத்திலான நீடித்ததும், நிலையானதுமான பொறுப்புகூறல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் நல்லிணக்கத்திற்கு பெரிதும் உதவும் என்று பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் கூடிய இந்த சிறந்த வாய்ப்பை அர்த்தமுள்ள நடவடிக்கைக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கை அரசாங்கம் வளமான எதிர்காலத்திற்காக மக்கள் மத்தியில் அமைதியை கட்டியெழுப்பும் என்று பான் கீ மூன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ad

ad