புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2015

தீவகம் வடக்கு, தெற்கு மட்டுமல்லாது முழுமையான தீவகத்தையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்பப்படும் - டக்ளஸ்

தீவகம் வடக்கு, தெற்கு மட்டுமல்லாது முழுமையான தீவகத்தையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்பப்படும் அதேவேளை,
இங்குள்ள மக்களது வாழ்வாதார பிரச்சினைகளுக்கும் ஏனைய தேவைப்பாடுகளுக்கும் தீர்வு காண்பதற்கு எதிர்காலத்தில் எமது முழுமையான பங்களிப்பு தொடருமேன ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
வேலணை சரவணைப்பதி சிறி செல்வக்கதிர்காம தேவஸ்தானத்தின் கும்பாபிசேகம் பக்திபாமாலை இறுவெட்டு வெளியிட்டு நிகழ்வில் நேற்றைய தினம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இப்பகுதியில் கோயில் ஒன்று நிர்மாணிக்கப்பட வேண்டுமென் மக்களின் நீண்டகால ஆசை நிறைவேறி அதற்கமைவாக செல்வக்கதிர்காம முருகன் ஆலயத்தின் ஆலய கட்டுமானப் பணிகள் யாவும் பூர்த்தியடைந்து கும்பாபிசேகம் நடைபெற்றுள்ள நிலையில் நீங்கள் யாவரும் மகிழ்ச்சியடையும் அதேவேளை, நானும் அந்த மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்கின்றேன்.
ஆகவே, இக் கோயிலை வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாது இப்பகுதி மக்களது கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களை எடுத்தியம்பும் வகையிலான ஒரு புனித இடமாகவும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென்பதுடன் இப்பகுதியின் சுற்றாடலை புனிதமாக பேணிப்பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவருடைய தலையாய கடமையுமாகுமென்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் குறிப்பாக இந்திய துணைத் தூதுவராக மட்டுமல்லாது ஒரு தமிழராகவும் கலந்து கொண்டுள்ள நடராஜன் அவர்களுக்கு மக்களின் சார்பில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாலயம் மென்மேலும் வளர்ச்சிகாண வேண்டுமென்பதே எனது விருப்பமாகும். அந்தவகையில், வேலணை மட்டுமல்லாது தீவகம் முழுமையையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்பப்படும் அதேவேளை, இங்குள்ள மக்களது வாழ்வாதார பிரச்சினைகளுக்கும் ஏனைய தேவைப்பாடுகளையும் தீர்வு காண்பதற்கு எதிர்காலத்தில் எமது முழுமையான பங்களிப்பு தொடருமென்றும் தெரிவித்தார்.
அத்துடன் நிகழ்வில் கலந்து கொண்டுள்ள இந்திய துணைத் தூதுவர் இப்பகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வந்துள்ளமைக்காகவும் அதுசார்;ந்த அவரது உறுதிமொழிகளுக்காகவும் அவருக்கு மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் இதனூடாக எமது தொப்புள்கொடி உறவை மேலும் வளர்த்தெடுப்பதற்கு வழிகோலுமென்றும் தெரிவித்தார்.
முன்பதாக, ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து ஆலய பரிபாலன சபைத் தலைவர் நல்லான் தேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்டிடக் கலைஞர்கள் உள்ளிட்ட ஆலய நிர்மாணப் பணிகளில் பங்கெடுத்தோர் கௌரவிக்கப்பட்டனர்.
இந்தியத் துணைத்தூதுவர் நடராஜன் அவர்கள் உரையாற்றியதைத் தொடர்ந்து சரவணைப்பதி சிறிசெல்வக்கதிர்காம முருகன் பக்திப் பாமாலை இறுவெட்டினை டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வெளியிட்டு வைத்தார்.

ad

ad