புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2015

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியனவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், மக்களது பிரச்சினைக்கு தீர்வு - பிரதமர் ரணில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியனவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், மக்களது பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமென
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்;.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘இன்று வரலாற்று சிறப்புமிக்க ஒரு நாளாகும்.

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், நாம் புதிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது

பொதுநலவாய நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளிலும் தேசிய அரசாங்கங்கள் உள்ளன. ஆனால், எங்கள் மக்கள் அந்த நாடுகளிலும் பார்க்க அதிக எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர்.

பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். எனினும், பிரச்சினைகளை தீர்ப்பதற்கு 2 வருடங்கள் போதுமானதென நான் நினைக்கின்றேன்.

கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியனவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண, அனைத்து மக்களும் அணிதிரள வேண்டும்.

அத்துடன், இன்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் ஒற்றுமையுடன், ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென நான் கேட்டுக்கொள்கின்றேன்’ என்றார்.

ad

ad