புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2015

எதிர்க் கட்சித் தலைவராகின்றார் சம்பந்தன்! மைத்திரி ஒப்புதல் வழங்கியுள்ளாராம்?


32 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார் என கொழும்பு அரசியல்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி 8வது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நியமிக்கப்படவுள்ளார்.
இந்த நியமனம் நாளை மறுநாள் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்பன இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளன.
இந்த நிலையில் அரசாங்கத்தில் இணையாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிகளவான 16 ஆசனங்களை கொண்ட கட்சியாக விளங்குகிறது.
எனவே அதற்கே எதிர்க்கட்சி தலைவர் பதவியை கொண்டிருக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இரா. சம்பந்தன் எதிர்வரும் 3ஆம் திகதியன்று நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுவார்.
இதேவேளை இதற்கான ஒப்புதலை ஜனாதிபதியும் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜே.வி.பியும் இந்த நிலைப்பாட்டுக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குமாரவெல்கமவை எதிர்க் கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என்ற கையெழுத்துக் கோரிக்கை ஒன்றும் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
எனினும் வெற்றிலை சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் (ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி) உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால் அதில் ஒரு குழு தனியான கட்சியாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று வாதிடப்படுகிறது.
இந்தநிலையில் சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டால், அது 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர் குறிப்பாக 32 வருடங்களுக்கு பின்னர் தமிழர் ஒருவர் இலங்கையில் எதிர்க்கட்சி தலைவராக நியமனம் பெறுவார்.
ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சியின் போது தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 1983ஆம் ஆண்டு ஒக்டோபர் 24ஆம் திகதிவரை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad