புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2015

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து பிரதிநிதிகள் ஜெனீவா பயணம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து பிரதிநிதிகள் ஜெனீவாவிற்கு செல்ல உள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்பதற்காக 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அதிகாரிகளுடன் இந்தப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் இலங்கைக் குறித்த அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னதாக இந்த பயணம் அமையவுள்ளது.


யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவாவில் வலியுறுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்ட விசாரணைப் பொறிமுறைமையை நிராகரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகம் ஐக்கிய நாடுகள் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ad

ad