புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 செப்., 2015

மாண்டு போகாத மனிதநேயம்: பிச்சை எடுத்த மாணவிக்கு ரஷ்யாவில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, மன நலம் பாதிக்கப்பட்ட தாயுடன் சேர்ந்து பிச்சை எடுத்த மாணவிக்கு, தற்போது ரஷ்யாவில் மருத்துவம்
படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண், தனது கார்த்திகா, சர்மிளா என்ற 2 மகள்களுடன் தேனி பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்து வந்தார்.
அவரை மீட்ட அவரது உறவினர்கள், மகள்களை தேனியில் உள்ள ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்தனர்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கார்த்திகா 8ம் வகுப்பிலும், சர்மிளா 6ம் வகுப்பிலும் சேர்ந்து படித்தார்கள்.
பத்தாம் வகுப்பிலும், 12ம் வகுப்பு பொதுத் தேர்விலும் கார்த்திகா நல்ல மதிப்பெண் பெற்றார். இவரது தங்கை சர்மிளாவும் தற்போது 11ம் வகுப்பு படித்து வருகிறார். 10ம் வகுப்பில் 488 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.
இதற்கிடையே, ஏழை மாணவிகளை தேர்வு செய்து மருத்துவக் கல்வி அளிக்கும் சென்னையை சேர்ந்த கல்வி அமைப்பு ஒன்று கார்த்திகாவை தேர்வை செய்து, ரஷ்யாவில் மருத்துவம் பயில அனுப்பியுள்ளது.
இது குறித்து கார்த்திகா கூறுகையில், எனக்கு பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான மறுநாளே எனது தாயார் இறந்துவிட்டார். எனக்கு மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்துள்ளது. ரஷ்யா செல்ல நல்ல ஆடைகள் கூட இல்லாமல் இருந்தேன். பலரும், தாங்களாக முன்வந்து ஆடைகள், செருப்பு, பைகள் வாங்கிக் கொடுத்து அவர்கள் வீட்டு பிள்ளை போல விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தனர்.
படித்து முடித்து, என்னைப் போன்று பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளை மீட்டு அவர்களை முன்னேற்ற வேண்டும் என்பதே என் லட்சியம் என தெரிவித்துள்ளார்.

ad

ad