புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2015

எதிர்க்கட்சித் தலைவராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிக்கிறது: கருணாநிதி

1977ஆம் ஆண்டு எனது அருமை நண்பர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக இருந்த அமிர்தலிங்கத்திற்கு பிறகு, சுமார் மூன்று தசாப்த
காலங்களுக்கு பின்னர் தமிழர் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தில்எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரியது என தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வாழ்த்து தெரிவித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கைத் தமிழர்கள் அனைவரும், தங்கள் வாழ்வில் விடிவு காலம் ஏற்படாதா என்று நீண்ட நாட்களாக எதிர்நோக்கியிருக்கும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நமக்கெல்லாம் ஓர் நம்பிக்கையைத் தருகிறது.சம்பந்தனும் இலங்கைத் தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்கவும், அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபடும் என்று கூறியிருப்பதும் மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்நிலையில், சம்பந்தனுக்கு தி.மு.க.வின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad