புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2015

போர்குற்றத்திற்கு எதிரான சர்வதேச விசாரணையை கைவிடக்கூடாது: அமெரிக்க தூதரகத்தில் திருமாவளவன் மனு

இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணையே தேவை என்பதை வலியுறுத்தியும் , இலங்கையின் உள்நாட்டு விசாரணை போதும் என்ற அமெரிக்காவின் 


இரட்டை வேடத்தை கண்டித்து, காணாமல்போனவர்களின் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் அமெரிக்க தூதாரக முற்றுகை போராட்டம் என அறிவிக்கப்பட்டது.

தமிழக காவல்துறை அனுமதி மறுத்தால் இன்று காலை (3.9.2015). 11 மணியளவில் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் முன்பு கண்டன ஆர்பாட்டமாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் சென்னை அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்று இரண்டு கோரிக்கையுள்ள மனுவை அரசியல் மற்றும் பொருளாதார பிரிவு அலுவலரிடம் திருமாவளவன் வழங்கினார்.

அமெரிக்க தூதரக நுழைவாயிலில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் கூறியதாவது, 

அமெரிக்க தூதரகத்தில் அரசியல் மற்றும் பொருளாதார பிரிவு அலுவலர் எங்களை சந்தித்தார் நாங்கள் வழங்கிய மனுவை பெற்றுகொண்டார். எங்களுடைய கோரிக்கைகளை மேலிடத்திற்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்திருக்கிறார் இரண்டு கோரிக்கைகளை முன்னிறுத்தி இருக்கிறோம்.

அமெரிக்க எடுத்த நிலைப்பாடான போற்குற்றத்திற்கு எதிரான சர்வதேச விசாரணையை கைவிடக்கூடாது என்பதும் ஈழத்தில் காணாமல்போனவர்களின் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் இந்த மனுவிலே நாங்கள் விடுத்திருக்கிற கோரிக்கைகள்.

இதை மேலிடத்திற்கு நாங்கள் தெரியப்படுத்துவோம் என்று அரசியல் மற்றும் பொருளாதார பிரிவு அதிகாரி எங்களிடத்தில் கூறினார். ஆனால் எங்களை வரவேற்ற முறை மிகவும் அநாகரியமானது மக்களுக்கு பணியாற்றக்கூடிய அரசியல் கட்சி தலைவர்களை நாடாளுமன்ற ,சட்டமன்ற உறுப்பினர் என்ற தகுதியுடையோர்களை உரியமுறைப்படி வரவேற்று இந்த மனுவை அவர்கள் பெறவில்லை வரவேற்பு வாசலிலேயே நின்றுகொண்டு எங்கள் மனுவை பெற்றுகொண்டார். நாங்கள் சொன்ன கோரிக்கையை கேட்டுகொண்டார். 

மதிமுக தலைவர் வைகோவை இதே போல வரவேற்பு வாசலிலேயே நிறுத்தி அவர்கள் இடத்தில் மனுவை பெற்றுகொண்டதாகவும் அதே முறைப்படிதான் உங்களை நாங்கள் வரவேற்கிறோம் மனுவை பெற்றுகொண்டோம் என்று எங்களிடத்திலே கூறினார்கள்.

இந்த நடைமுறையை வன்மையாக விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கண்டிக்கிறேன். ஒரு அடிப்படை நாகரீயத்தைக்கூட கடைப்பிடிக்க தயாராக இல்லை அமெரிக்க தூதரகம் என்பது வேதனையளிக்கிறது. ஆகவே விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் இந்த அணுகுமுறையை கண்டிக்கிறோம். இவ்வாறு கூறினார். 

ad

ad