புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2015

சசிபெருமாள் மகன்கள் கைது



சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இ.மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த காந்தியவாதி சசிபெருமாள் கடந்த மாதம் குமரி மாவட்டம் உண்ணாமலைகடை பகுதியில் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய போது உயிர் இழந்தார்.  இவரது மரணத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மதுக்கடைகளை மூடக்கோரி போராட்டம் நடத்தினார்கள். சசிபெருமாள் குடும்பத்தினர் அவரது சமாதி முன்பு பூரண மதுவிலக்கு கோரி உண்ணாவிரதம் இருந்தனர்.

இந்த நிலையில் சசி பெருமாள் மகன்கள் நவநீதன், விவேக் மற்றும் சசிபெருமாளின் அண்ணன் வெங்கடாசலம், தம்பி செல்வம், அவரது மகன் ராஜா ஆகியோர் இன்று காலை 7 மணி முதல் வீட்டின் அருகே தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள்.

முதல் கட்டமாக பஸ் நிலையம், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

சட்டசபை கூட்டம் முடியும் வரை தினமும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் அறிவித்தனர்.

முன்னதாக கஞ்சமலை சித்தர்கோவில் அருகே உள்ள காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருக்க மகுடஞ்சாவடி போலீசாரிடம் குடும்பத்தினர் அனுமதி கேட்டனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனையடுத்து அவர்கள் வீட்டின் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் உண்ணாவிரதம் இருந்த 5 பேரும் பஸ்சில் இளம்பிள்ளைக்கு சென்று காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.  இதையடுத்து மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி, போலீசார் சசிபெருமாளின் மகன்கள் உள்பட 5 பேரையும் கைது செய்தனர்.

ad

ad