புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 செப்., 2015

ஜனாதிபதியின் அதிகாரத்தால் தூக்கை நிறைவேற்ற முடியும் - பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு

குற்றச் செயல்களுக்காக விதிக்கப் படும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் நாடாளுமன்றின்
அனுமதி தேவையில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டிய அவசியம் தேசிய அரசுக்கு இருக்குமானால், அதனை ஜனாதிபதியின் அதிகாரத்தால் நிறைவேற்ற முடியும் எனக் குறிப்பிட்டுள்ள பிரசன்ன ரணதுங்க, அதற்காக நாடாளுமன்றின் அனுமதியைப் பெற வேண்டிய அவசிய மில்லை என்றும் கூறியுள்ளார்.
எனினும் ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் ஜனாதிபதி அதனை நாடாளுமன்றின் பொறுப்புக்கு விட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தூக்குத் தண்டனையை நடை முறைப்படுத்த எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அதேவேளை, வெளிவிவகார அமைச்சர் தூக்குத் தண்டனை நடை முறைப்படுத்தப்பட மாட்டாது என்று ஜெனிவாவில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் ஜனாதிபதி காலியில் தெரிவித்த கருத்தையா? அல்லது மங்கள ஜெனிவாவில் வெளியிட்ட கருத்தையா மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று புரிய வில்லை என்றும்  பிரசன்ன தெரிவித்துள்ளார்.                             

ad

ad