புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 செப்., 2015

சிபிஐ விசாரணை கோரி தமிழக உள்துறை செயலாளருக்கு விஷ்ணு பிரியா தந்தை மனு

எனது மகள் மரணத்தை சி.பி.ஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளியே வரும். எனவே சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட
வேண்டும் என்று கோரி தமிழக உள்துறைச் செயலாளருக்கு விஷ்ணு பிரியாவின் தந்தை புகார் மனு அனுப்பியுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட டிஎஸ்பி விஷ்ணு பிரியாவின் தந்தை ரவி, சேலம் காவல்துறை துணை தலைவர் வழியாக தமிழக உள்துறைச் செயலாளருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், 'எனது மகள் செல்வி விஷ்ணு பிரியா, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். அவருக்கு காவல்துறை உயர் அதிகாரிகளாலும் சில சாதிய சமூக விரோதகளின் மூலமும் அச்சுறுத்தல் இருந்ததாக பலமுறை என்னிடம் கூறி இருந்த நிலையில் 18.9.2015ல் பணியில் இருக்கும்போதே தூக்கிட்டு இறந்ததாக தகவல் கிடைக்கப்பெற்று அவரது சடலம் சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கேள்விப்பட்டு இங்கு வந்துள்ளேன்.

எந்த சூழ்நிலையிலும் என் மகள் தற்கொலை செய்ய கூடிய சூழல் கிடையாது. ஆகவே அவரது மரணத்தை சி.பி.ஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளியே வரும். எனவே சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய விஷ்ணுபிரியா தற்கொலை செய்தவுடன் அவரது தோழியும், கீழக்கரை துணை கண்காணிப்பாளரான மகேஷ்வரி, அதிரடியாக காவல்துறை உயரதிகாரிகள் மீது குற்றம் சுமத்தினார். அதிகாரிகளின் டார்ச்சரால் மட்டுமே விஷ்ணுபிரியா தற்கொலை செய்ததாக பகிரங்கமாக தெரிவித்தார். இதை முற்றிலும் மறுத்து விளக்கமளித்துள்ளார் ஐ.ஜி சங்கர். அவர் கூறுகையில், 'விஷ்ணுபிரியா ஏற்கனவே மூன்று முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதில் 2 முறை அவர் எழுதிய தற்கொலை கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் டி.எஸ்.பி. மகேஷ்வரியின் தகவல் அர்த்தமற்றது. ஏதோ உள்நோக்கத்தில் அவர் இதுபோன்ற தகவலை  தெரிவித்துள்ளார்' என்றார்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு விஷ்ணு பிரியாவின் தந்தை ரவி அளித்த பேட்டியில், அதிகாரிகளின் தொந்தரவால் விஷ்ணு பிரியா மரணம் அடைந்திருக்கலாம். வீட்டில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தின் சில பக்கங்களை காவல்துறையினர் காட்டவில்லை. விஷ்ணு பிரியாவின் பிரேத பரிசோதனையை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

ad

ad