புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2015

போகப்போக தெரியும்...: வைகோ பதில்



மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் நடத்தும் அனைத்து ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டு வருகிறார்கள். கூட்டு இயக்கத்தை மக்கள் விரும்புகிறார்கள். தொடர்ந்து நாங்கள் ஊழல் எதிர்ப்பு போராட்டங்களை நடத்துவோம் என்றார்.

கேள்வி:- உங்கள் கூட்டு இயக்கத்திற்கு யார் தலைமை வகிக்கிறார்கள்?

பதில்:- இங்கே இருக்கும் அனைவருமே தலைமை தாங்குகிறார்கள்.

கேள்வி:- கூட்டு இயக்கம் கூட்டணியாக மாறும் என்று அறிவித்திருக்கிறீர்கள். உங்கள் கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்?

பதில்:- கூட்டு இயக்கம் கூட்டணியாக மாறும்போது, மற்ற விஷயங்களை நாங்கள் அறிவிப்போம்.

கேள்வி:- உங்கள் கூட்டு இயக்கத்தில் தே.மு.தி.க., த.மா.கா. கட்சிகள் வருமா?

பதில்:- எல்லாமே போகப்போக தெரியும் என்றார். 

முன்னதாக ம.தி.மு.க. அலுவலகத்தில் மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ. ஜவாருல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது? மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தை எவ்வாறு பலப்படுத்துவது? உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

ad

ad