புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2015

ரகசிய முகாம்களில் இன்னமும் உயிரோடு இருக்கும் காணாமல் போனோர் கொல்லப்படலாம்


காணாமல் போனவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான பிரேரணை ஒன்றுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
இது தொடர்பான தகவலை அமைச்சர் வஜிர யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவிய உள்நாட்டு யுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணாமல் போயுள்ளனர்.
வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பில் மட்டுமன்றி யுத்தத்துடன் எவ்வகையிலும் தொடர்புறாத இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு உள்ளிட்ட பல குழுக்கள் நியமிக்கப்பட்டும் இதுவரை காணாமல் போனவர்களில் ஒருவரைப் பற்றிய தகவல் கூட வெளிவரவில்லை.
இந்நிலையில் காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் காணாமல் போன அனைவர் தொடர்பிலும் அவர்களது உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான பிரேரணைக்கு அமைச்சரவையின் ஒப்புதலும் கிடைக்கப்பெற்றுள்ளது.

ad

ad