புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 செப்., 2015

காலியில் கடுமையான வெள்ளம்! மூழ்கடிக்கப்பட்ட வீதிகளில் போக்குவரத்து துண்டிப்பு


காலி மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் பெய்த கடுமையான மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே காலியின் ஊடாக கடலுக்குள் பாய்ந்து செல்லும் கிங்கங்கை கடும் வெள்ளப்பெருக்கால் இருகரைகளும் தாண்டி பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதன் காரணமாக பத்தேகம- அகலிய, பத்தேகம- உடுகம, நாகொட- உடுகம உள்ளிட்ட வீதிகள் உட்பட ஏராளமான வீதிகளை வெள்ளம் மூழ்கடித்துள்ளது.
காலி - பத்தேகம வீதியின் இன்று பகல் தொடக்கம் வெள்ளம் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
காலி பொல்அத்துமோதர கங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக யக்கலமுல்ல பிரதேசமும் நீரில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலியை அண்மித்த மாத்தறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இவ்வாறான வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்தில் கடுமையான சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad