புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2015

காணாமல் போனோர் தொடர்பில் ஐ.நா. சபை தலை­யிட வேண்டும்

காணாமல் போன­வர்­களின் தாய்­மாரின் கண்­ணீரைத் துடைத்து அவர்­க­ளுக்கு ஆறுதல் வழங்­காது ‘மெத்­தனப்’ போக்கை கடைப்­பி­டித்தால் அது நாட்­டுக்கு
சாப­மாக மாறி­விடும் எனத் தெரி­வித்­துள்ள ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் உப­பொதுச் செய­லா­ளரும் மேல்­மா­கா­ண­சபை உறுப்­பி­ன­ரு­மான சண்.குக­வ­ரதன் இவ்­வி­ட­யத்தில் ஐ.நா மனித உரிமை ஆணைக்­குழு தலை­யிட்டு காணாமல் போன தமிழ் மக்­க­ளுக்கு என்ன நடந்­தது என்ற உண்­மையை வெளிக்­கொண்டு வர வேண்­டு­மென்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.
இது தொடர்­பாக மேல்­மா­கா­ண­சபை உறுப்­பினர் சண்.குக­வ­ரதன் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, காணாமல் போன­வர்கள் தொடர்­பாக விசா­ர­ணைகள் நடத்தும் ஆணைக்­கு­ழுவின் நட­வ­டிக்­கைகள் தற்­போது நாட்டில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.
அண்­மையில் ஒரு விசா­ரணை இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கையில் பிள்­ளையை பறி­கொ­டுத்த தாயொ­ருவர் தனது குறையை கூறி கதறி அழு­கிறார். ஆனால் அதைக் கேட்கும் அதி­காரி ‘உணவு உட்­கொண்டு’ மெத்­தனப் போக்கை கடைப்­பி­டிப்­பதை காணக்­கூ­டி­ய­தா­க­வி­ருந்­தது. ஒரு தாயின் கண்­ணீ­ரையும் வேத­னை­யையும் கேட்­காமல் இவ்­வாறு செயற்­ப­டு­வதால் நாட்­டுக்கு ‘சாபமே’ கிடை க்கும்.
தாய்­மாரின் கண்­ணீ­ருக்கு சக்­தி­யுள்­ளது. எனவே அதன் சாபத்­திற்கு உள்­ளாகி விடக்­கூ­டாது. எனவே பல தசாப்­தங்­க­ளாக காணாமல் போன­வர்கள் தொடர்­பாக தீர்வு கிடைக்­காமல் தமது பிள்­ளை­க­ளுக்கு என்ன நடந்­தது எனத் தெரி­யாமல் தத்­த­ளிக்கும் தாய்­மா­ருக்கு ஆறு­தலை பெற்­றுக்­கொ­டுக்க ஐ.நா மனித உரிமை ஆணைக்­குழு தலை­யிட வேண்டும். காணாமல் போன தமது உற­வுகள் உயி­ரோடு இருக்­கின்­ற­னரா அல்­லது அவர்களுக்கு என்­ன­வா­னது எனும் உண்­மையை தெரிந்து கொள்­வ­தற்கு வழி­வ­குக்க வேண்டும்.
அதே­போன்று நல்­லாட்­சிக்­கான அரசும் இவ்­வி­ட­யத்தில் அதிக கவனம் செலுத்த­ வேண்டும். காணாமல் போன­வர்கள் தொடர்­பான விசா­ர­ணைகள் நியா­ய­மாக நீதி­யாக நடத்­தப்­ப­டு­வதை அரசு உறுதி செய்­ய­வேண்டும் என்றும் சண்.குக­வ­ரதன் தெரிவித்துள்ளார்.

ad

ad