புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2015

படியுங்கள்.. பிராந்திய - பூகோள சதியை அறியங்கள்..புலிகளின் "மனிதக் கேடய" மர்மம் பரியும்.. பின்பு புலிகள் போர்க்குற்றவாளிகளா? என்ற முடிவுக்கு வாருங்கள்

இந்த புரொஜெக்ட் பெக்கன் 1 இன் முக்கிய ஒரு செயற்பாடாக புலிகளை போர்க்குற்றவாளிகளாக்கும் ஒ
ரு வரைபு இருக்கிறது. 2005 இலேயே புரிந்துணர்வு உடன்படிக்கை முறிந்து போர் வெடிக்க முன்பே புரொஜெக்ட் பெக்கன் இல் இந்த பகுதியை கொண்டு வந்த சாணக்கியத்தனத்தை நாம் வியக்காமல் இருக்க முடியாது. ஒரு நடைமுறை அரசை அழிப்பதென்றால் சும்மாவா?
இனி விடயத்தை பார்ப்போம். வெளியக அடிப்படையில் புலிகளை பயங்கரவாதிகள் முத்திரை குத்தி அழித்த பிற்பாடு நிலத்தில் புலிகளையும் மக்களையும் வேறுபடுத்தும் நோக்குடன் பெக்கான் திட்டம் புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்த நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பரப்பு மூன்று கடலோரப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. ஒரு ஆண்டுக்கு ஒரு பிரிவு வீதம் மூன்று ஆண்டுகளில் (2006-2009) மொத்த நிலப்பரப்பையும் கைப்பற்ற வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது அப்படியே நடந்தும் முடிந்தன. அப்போது மக்கள் புலிகளோடு சென்று ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்குவார்கள் என்றும் அப்போது இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையில் இருக்கும் மக்களை ‘மனிதக்கேடயம்’ என்ற அடிப்படையில் பிரித்து புலிகளை போர்க்குற்றவாளிகளாக்க முடியும் என்று திட்டம் தீட்டப்பட்டது. அப்படியே நடந்தும் முடிந்தது.
புலிகளை மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தவில்லை. அப்படி ஒரு சிந்தனையும் இல்லாத, போரே தொடங்காத ஒரு காலப்பகுதியில் ரோக்கியோவிலும் பின்பு ஒஸ்லோவிலும் வைத்து இந்த ‘மனிதக் கேடயம’; (human shield ) என்ற பதத்தை பயன்படுதத்pயதே இந்த புரொஜெக்ட் பெக்கான் திட்டத்தை வரைந்த சதிக் கூட்டணிதான்.
இந்த உண்மை எத்தனை பேருக்கு தெரியும்? அந்த திட்டத்தின் பிரகாரமாகவே இன்று புலிகள் மனிதக் கேடய குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்கள். எந்த அரசியல் – இராணுவ புரிதலுமின்றி குறிப்பாக நிலப்பரப்பு குறித்த புரிதலின்றி இதை வாந்தியாக எடுக்கும் நமது மனித உரிமைவாதிகள், ஜனநாயகவாதிகள்ஈ ஆய்வாளர்கள் அரசியல்வாதிகளை என்னவென்று சொல்வது?

ad

ad