புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2015

பிரபாகரனின் இறப்பு பற்றி எவராலும் முடியாது: கே.பி



விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதியுத்தத்தின் போது எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பில் எவராலும் சரியான தகவல்களை வெளியிட முடியாது என புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் கே.பி தெரிவித்துள்ளார்.
தற்போது பிரபாரனின் மரணம் தொடர்பாக முன்னாள் பிரதியமைச்சர் கருணா மற்றும் பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா ஆகியோர் பல முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும் பிரபாகரனுடன் மிக நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் பிரபாகரன் தொடர்பில் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பிரபாகரனின் இறப்பு பற்றி துல்லியமாக கூற எவராலும் முடியாது.
அதுமட்டுமின்றி, இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, பிரபாகரனுடன் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எவரும் உயிருடன் இல்லை.
யுத்தம் நடைபெற்றபோது சிலருடன் தாம் தொடர்பு கொண்டு கள நிலவரங்களை அறிந்து கொண்டிருந்தபோதிலும், நந்திகடல் பகுதியில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது எவரும் உயிருடன் இருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே பிரபாகரன் எவ்வாறு உயிரிழந்தார் என தற்போது கூறுவது சாத்தியப்படாத விடயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,பிரபாகரனுக்கு என்ன நேர்ந்தது என்பதனை  தம்மாலேயே குறிப்பிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் தேவைகளுக்காக தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் தமக்குக் கிடையாது எனவும்,
பிரபாகரன் எவ்வாறு உயிரிழந்தார் என்பது பற்றி தோண்டித் தேடுவதனை விட, அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்றுவதற்கு அனைவரும் இணைந்துகொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ad

ad