புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2015

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான ஆசனங்கள்



புதிய நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான ஆசனங்கள் நேற்று உரிய முறையில் ஒதுக்கப்பட்டிருந்தன.
இதனடிப்படையில் ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு சபாநாயகருக்கு வலது பக்கமும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடது பக்கமும் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
ஆளும் கட்சியின் முன்வரிசை ஆசனங்களின் முதல் ஆசனங்களில் அமைச்சர்கள் மங்கள சமரவீர, எஸ்.பி. திஸாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, காமினி ஜயவிக்ரம பெரேரா ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
அடுத்ததாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்கவுக்கு அருகில் தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்னவுக்கும் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
அதற்கு சற்று முன்னால், நிபுணத்துவம் மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கும் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது.
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் தொலைத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் தொழிற்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் அடுத்தடுத்த ஆசனங்களில் அமர்ந்திருந்தனர்.
இருவரும் பேசிக் கொள்ள மாட்டார்கள் என பலர் எண்ணிய போதிலும் அவர்கள் இருவரும் மிகவும் நட்புறவாக சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.
அதேவேளை எதிர்க்கட்சி வரிசையில் முன்வரிசை ஆசனங்களில் முதல் ஆசனத்தில் ஈபிடிபியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் அவருக்கு அடுத்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் அமர்ந்திருந்தனர்.
அதற்கு அடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் அமர்ந்திருந்ததுடன் அடுத்தடுத்த ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்திற்கு அருகில் உள்ள ஆசனம் நேற்று வெறுமையாக காணப்பட்டது. அந்த ஆசனம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
மகிந்த ராஜபக்ச நேற்று சபைக்கு சமூகமளிக்கவில்லை. அவரது ஆசனத்திற்கு அருகில் அவரது சகோதரான ஷமல் ராஜபக்சவுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது.
எதிர்க்கட்சியின் பின்வரிசை ஆசனம் நாடளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்தது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் நேற்று சபைக்கு வருகை தராத காரணத்தினால், உதய கம்மன்பில் அவரது ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அதற்கு அடுத்த ஆசனத்தில் விமல் வீரவன்ஸ அமர்ந்திருந்தார்.

ad

ad