புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 செப்., 2015

மைத்திரி - பான் கீ முன் சந்திப்பு இன்று


ஐக்கிய நாடுகள் மாநாட்டின் 70 வது அமர்வில் கலந்துகொள்வதற்கு நியூயார்க் நோக்கி சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பல நாடுகளின் அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஜனாதிபதி மற்றும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ முன்க்கு இடையில் சந்திப்பொன்றும், பொதுநலவாய நாடுகளின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளது.
அதற்கமைய ஜனாதிபதி இன்றைய தினம் சுவிட்ச்சர்லாந்து ஜனாதிபதி சிமோனிட்டா சொமாருகாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் விசேட சந்திப்பொன்றில் கலந்துகொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் உலக செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் பீடர் மவுரேவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளார்.
மேலும், ஐக்கிய நாடுகள் மாநாட்டின் அடுத்த அமர்வின் உபசார நாடான தென் ஆபிரிக்கா ஜனாதிபதி ஜாகோப் சுமாவினால் ஏற்பாடு செய்யப்படும் இரவு விருந்திலும் கலந்துகொள்ளவுள்ளார்.

ad

ad