புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 செப்., 2015

சர்வதேசத்துடன் இணைந்த பொறிமுறையே பொருத்தம்-நியூயோர்க்கில் நரேந்திர மோடிஇலங்கை முன்பிருந்த நிலையில்
இருந்து ஒரு கடல் மாற்றம் போன்று மாறியுள்ளது. நீதிக்காக நாம் நிற்கி றோம். அதே நேரம் இலங்கையின் இறைமைக்கும் மதிப்பளிக்கின்றோம். போர்க்குற்றங்களை விசாரிக்க இலங்கை உள்நாட்டு மற்றும் சர்வதேச நீதிப் பொறிமுறை கலந்த திட்டமொன்றை உருவாக்குவதே பொருத்தமாக அமையும். அது தான் அனைவருக்கும் வசதியானது என இந்தியா தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நியூயோர்க்கில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப் பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ்ஸ்வரூப் மேற் கண்டவாறு கூறினார்.இது தொடர்பில் இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்ததாவது:-ஐ.நா. மனித உரிமைகள் சபையில், இலங்கை மனித உரிமைகள் நிலைமை தொடர்பான பிரச்சினை குறித்து
இலங்கை ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் கருத்துப் பரிமாறினார். இந்த விடயத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்ற கருத்துக்கு இந்தியா பொதுவாகவே ஆதரவ ளிக்கும். அதேநேரம் இலங்கை யின் இறையாண்மைக்கு மரியாதையளிக்கின்றோம். இலங்கையின் புதிய அரசு ஐ.நா மனித உரிமைகள் சபையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தில் கொண்டுள்ள ஈடுபாடு மற்றும் அணுகு முறை அந்தத் தீவின் கடல் மாற்றம் போன்று உள்ளது- என்றார்.இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைக்குச் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் அமைக்கும் பரிந்துரை குறித்து இந்தியாவின் நிலைப்பாடு என்ன எனக் கேட்டதற்குப்.பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர்,இது தொடர்பில் தற்போது கொண்டு ரப்பட்டுள்ள வரைவுத் தீர்மானத்தின் இறுதி வரைவில் புதுடில்லிக்கு நம்பிக்கை உள்ளது. இதனை இலங்கை அரசும் ஒருமித்து ஏற்றுக்கொள்ளும்.இந்தக் கட்டத்தில், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருமித்த தீர் மானமாக இது அமையும் என எமது எதிர்பார்ப்பு. இதனை இலங்கை அரசும் ஏற்றுக்கொள்ளவேண்டியதாகிறது-என்றார்.ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹுசைன் சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மற்றும் புலனாய்வாளர்கள் ஒருங்கிணைத்து, ஒரு கலப்பு சிறப்பு நீதிமன்றம் அமைக்கவேண்டும் என்ற அழைப்பை விடுத்திருந்தார். எனினும் இலங்கை அரசு உள்நாட்டுப் பொறிமுறை என வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட விகாஸ் ஸ்வரூப்,அது இலங்கை முன்பு இருந்த நிலையில் இருந்து ஒரு கடல் மாற்றம் போன்று மாறியுள்ளது. நீதிக்காக நாம்www.pungudutivuswiss.com
நிற்கிறோம். அதே நேரத்தில் நாங்கள் இலங்கையின் இறைமையையும் பிரச்சினைகள் மரியாதைளிக்கின்றோம். இந்தப் பிரச்சினைக்கு இலங்கை உள்நாட்டு மற்றும் சர்வதேச நீதிப் பொறிமுறை கலந்த திட்டமொன்றை உருவாக்கினால் பொருத்தமாக அமையும். இதுதான் அனைவருக்கும் வசதியாக அமையும்.-என்றார்.

ad

ad