புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 செப்., 2015

நாடாளுமன்றத்தில் இரண்டு எதிர்க்கட்சிகள்


நாடாளுமன்றத்தில் ஐக்கிய சுதந்திர முன்னணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 47 பேர் எதிர்க்கட்சி வரிசையில் அமர தீர்மானித்துள்ளதால், நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 22ம் திகதி கடும் நெருக்கடியான நிலைமை ஏற்படும் என அந்த முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், நாடாளுமன்றத்தில் இரண்டு எதிர்க்கட்சிகள் செயற்பட உள்ளதாகவும் சம்பந்தன் தலைமையிலான எதிர்க்கட்சியை விட உண்மையான எதிர்க்கட்சியாக 47 பேரை கொண்ட தமது அணி செயற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் 47 பேரை கொண்ட தமது அணி சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்க்கட்சியாக ஏற்காது என்றும் தமிழர் என்பதற்காகவே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பதற்காகவோ தாம் இதனை கூறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியாக சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட 47 பேரை கொண்ட எதிரணி உள்ளது. மகிந்த ராஜபக்ச, தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் எமது அணியில் உள்ளனர்.
இதனை தவிர அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை வகிக்கும் நிமால் சிறிபால டி சில்வாவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக நியமித்தமையும் சிக்கலான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிக்கல் எதிர்காலத்தில் தீர்க்கப்படும்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்வதற்காக 47 பேர் கொண்ட அணி எதிர்வரும் 2 ஆம் திகதியில் இருந்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும். நாடாளுமன்றத்தில் தாம் உரையாற்ற ஆளும் கட்சியே நேரத்தை ஒதுக்கி தர வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் ரஞ்சித் சொய்சா மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad