புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2015

இறுதிவரை திக்திக் ஆட்டம் :பற்றிக்ஸிடமிருந்து தவறியது தங்கம்

st.patricks
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட உதைபந்தாட்டத் தொடரின் 17 வயதுக் குட்பட்ட ஆண்கள் பிரிவின்
இறுதியாட்டத்தில் இறுதி நிமிடம் வரை மிகக்கடுமையாக போராடி தோல்வியடைந்தது சென்.பற்றிக்ஸ்.
சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இந்த இறுதியாட்டத்தில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து வென்னப்புவ சென்.ஜோசவாஸ் கல்லூரி அணி மோதிக் கொண்டது. ஆட்டத்துடன் இணைந்த முறையில் அனல்பறந்த போராட்டமும் அரங்கேறியது. கிண்ணக்கனவுடன் இரு அணியின் வீரர்களும் முழு மூச்சுடன் போராடினர்.
ஆனால் கோல் கணக்கு ஆரம்பிக்கப்படவில்லை. பந்து அங்குமிங்குமாக அல்லாடித் திரிந்ததே மிச்சம். இறுதியாட்டத்துக்குரிய பாணியில் முடிவுக்கு வந்தது முதல்பாதி.
இரண்டாம் பாதியிலும் அதே நிலைமைதான். 37ஆவது நிமிடத்தில் வென்னப்புவ சென்.ஜோச வாஸ் கல்லூரியின் சார்பாக முதல் கோல் பதிவானது. ஆதிக்கம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அடுத்த பத்து நிமிடத்தில் எவரும் எதிர்பார்க்காத மிக அபாரமான கோலின் மூலம் பழிதீர்த்தது பற்றிக்ஸ். வேறெந்த கோல்களும் முடிவுவரை பதிவாகவில்லை. சமநிலைத் தவிர்ப்பிலும் திக்திக் நிலைமை. படாதபாடுபட்டு 4:3 என்ற கோல் கணக்கில் சம்பியனானது வென்னப்புவ சென்.ஜோச வாஸ் கல்லூரி அணி. மொத்தத்தில் தங்கத்தை தவறவிட்டது சென்.பற்றிக்ஸ்.

st.patricks-josavas

ad

ad