புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2015

ஜ.நா பிரேரணை ; உள்ளக விசாரணையை வலியுறுத்துவதாக உள்ளது;சி.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

பல நாடுகளின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், அந் நாடுகள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவுமே யுத்தக் குற்றம் மீதான
சர்வதேச விசாரணை என்ற தலைப்பில் ஜ.நாவில் கொண்டுவரப்பட்ட பிரேரணை தற்போது உள்ளக விசாரணையை வலியுறுத்துவதாக உள்ளது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
சர்வதேசத்தின் நலன்களுக்காக தமிழ் மக்களின் நலன்கள் சூரையாடப்படுவதை நாம் ஒரு போதும் ஏற்கப் போவதில்லை, அதனை தொடர்ந்தும் எதிர்ப்போம் என்றும் அவர் மேலும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபையின் மாதாந்த அமர்வு இன்று காலை கைதடியில் உள்ள பேரவை செயலகத்தில் நடைபெற்றது.
இதன் போது முதலமைச்சரால் கொண்டுவரப்பட்ட சர்வதேச விசாரணையினைக்கோரும் தீர்மானம் ஏன் அவசரமாக கொண்டுவரப்பட்டதென கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.தவநாதன் சர்வதேசத்தின் ஓட்டத்திற்கு எதிர் திசையில் ஓடி தமிழர்கள் இறுதியில் தோல்வி கண்டதே வரலாறு, எனவே சர்வதேசத்தின் ஓட்டத்திற்கு எதிர் திசையில் நாங்களும் ஓடுவது சரியானதா? என சபையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு பதில் வழங்கினார்.
தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்:-
கடந்த சில நாட்களக்கு முமுன்னர்; அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வாலுக்கும்; தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பில் யுத்தக் குற்றங்களுக்கு உள்ளக விசாரணை நடத்தப்படும் அதன் ஊடாகவே தீர்வு என்றவாறான சமிக்ஞையே காண்பிக்கப்பட்டிருக்கின்றது.இந்நிலையில் சர்வதேச உள்ளீடு அல்லது மாற்று வழி குறித்து நாங்கள் சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம். இதேவேளை உள்ளக விசாரணை என்பது எமக்கு நன்மையளிக்கும் ஒரு விடயமல்ல. எமது மக்கள் சந்தித்திருக்கும் இழப்புக்க ளுக்கும், எமது மக்கள் மீது நடத்தப்பட்ட அநீதிகளுக்கும் நீதி ஒருபோதும் கிடைக்காது. இந்நிலையில் எமக்கு சில விடயங்கள் உணர்வில் தட்டியமையாலேயே சர்வதேச விசாரணையின் தேவைப்பாட்டை முதன்மைப்படுத்தி இந்த பிரேரணையினை முன்மொழிந்திருக்கிறோம்.
உங்களுடைய கருத்தில் பெரும்பான்மை பலத்துடன் உள்ளவர்களுடன் சேர்ந்து நாங்களும் ஓடவேண்டும் என்ற நிலைப்பாடு உள்ளதாக நான் அவதானிக்கிறேன். ஆனால் அது முறையான தல்ல. எமக்கு எது சரியானது? எமக்கு எது நீதியானது? என்பதை நாங்கள் அறிந்து அதையே செய்யவேண்டும். உள்ளக விசாரணையில் தீர்வு எவ்வாறு வரும் என்பது எமக்குதெரியும் அதில் குழுப்பம் தேவையில்லை. எனவே எமக்கு என்ன தேவை என்பதை நாங்கள் கேட்பதை யாரும் பிழையாக பார்க்க முடியாது. சர்வதேச நாடுகள் தங்களுடைய நலன்களில் அதிகம் அக்கறை காட்டுவார்கள். அதற்காக எங்களுடைய மக்களுடைய நலன்களை அடகு வைக்க முடியாது. என முதலமைச்சர் சபையில் சுட்டிக்காட்டினார்.

ad

ad