புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2015

ஜனாதிபதியின் பிரதிநிதியாக சம்பிக்க, பிரதமரின் பிரதிநிதியாக விஜயதாச

அரசியல் சாசனப் பேரவைக்கான ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பிரதிநிதிகள் பெயரிடப்பட்டுள்ளனர்.



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதியாக அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிரதிநிதியாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


சபாநாயகர், எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் அரசியல் சாசன பேரவையில் அங்கம் வகிக்கின்றனர்.
அரசியல் சாசனப்பேரவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 10 என்பது குறிப்பிடத்தக்கது.


பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் பிரதிநிதிக்கு மேலதிகமாக சிறு கட்சிகளின் பிரதிநிதி ஒருவரும், எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதி ஒருவரும், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மூவரும் நியமிக்கப்பட உள்ளனர்.அரசியல் சாசனத்தின் 19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அரசியல் சாசனப் பேரவை நிறுவப்பட உள்ளது.


அரசியல் சாசனப் பேரவை நிறுவப்பட்டதன் பின்னரே சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad