புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2015

தனது மனைவியை வைத்து அமெரிக்காவுக்கு தண்ணி காட்டினேன்!! மின்னல் ரங்கா சொன்னது என்ன?

சக்தி தொலைகாட்சியை இன்று தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஜே ஸ்ரீரங்கா இன்று இலங்கை அரசியலில் செல்லாக்காசாகி விட்டார்,
அதுவும் மலையக அரசியலுக்குள் புகுந்து மிக கேவலமாகிப்போனார்,
இந்த ரங்கா தொடர்பாக ஒரு அதிர்ச்சித்தரும் விடயமொன்றை இலங்கையின் அமெரிக்க தூதரகத்தில் முன்னர் கடமையாற்றிய ஒருவர் மூலம் அம்பலமானது.
இலங்கையின் அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய பத்மினி ராஜதுரையுடன் ரங்கா மிகவும் நெருக்கமாக இருந்த காலம் அது அப்போது அமெரிக்க தூதரகத்துக்கு நாட்டு நடப்பு பற்றிய விபரங்களை வழங்கி வந்தவர் ரங்கா, இப்படியாக அந்த தூதரகத்துடன் அன்னியோன்யமாக இருந்தபோது ரங்காவுக்கு தனது துணைவியாருடன் அமெரிக்கா செல்ல ஆசை வந்தது உடனடியாக அவருக்கான வீசாவும் கிடைத்தது ரங்கா தனது துணைவியாருடன் அமெரிக்கா சென்றார்.
அமெரிக்கா சென்ற இரண்டு மாதத்தில் ரங்காவின் துணைவியாருக்கு குழந்தை பிறந்தது அமெரிக்க வைத்தியசாலையில் குழந்தை பிறந்ததும் அமெரிக்க தூதரகம் அதிர்ச்சியடைந்தது, உலக சட்டத்தின் பிரகாரம் நிறைமாத கற்பிணி பெண் விமானத்தில் பயணிக்க முடியாது இப்படியான சட்டவிதிகள் பற்றி தெரிந்த ரங்கா அதை அமெரிக்க தூதரகத்துக்கு மறைத்து வேலைப்பார்த்த அவரின் செயலை கண்டு தூதரக அதிகாரிகள் சினம் கொண்டனர், பத்மினி ராஜதுரை கடுமையாக எச்சரிக்கப்பட்டார்.
ரங்கா போட்ட திட்டம் வெற்றியளித்தது அமெரிக்க தூதரகத்தார் ஏமாந்து போனார்கள், ரங்காவின் மகனுக்கு அந்த நாட்டு பிரஜாவுரிமை வழங்க வேண்டிய கட்டாயத்துக்குள் அமெரிக்கா தள்ளப்பட்டது. இப்படி அமெரிக்காவுக்கே தண்ணி காட்டிய ரங்காவை பார்த்து அவருக்கு நெருக்கமான ரஜபக்ஸ குடும்பத்தினரே ஒருமுறை விளையாட்டாக சொல்லி சிரித்தார்களாம். இந்த தகவலை வழங்கிய அந்த நண்பர் இந்த விடயத்தில் என்னை காட்டிக் கொடுத்து விடாதீர்கள் என்றார், உண்மையில் தகவல் எங்கிருந்து கிடைத்தது என்ற விடயத்தை ஊடகவியலாளனிடம் கேட்க முடியாது, அது சர்வதேச ஊடக சுதந்திரம் ஆனால் அந்த விடயம் உண்மையா என்று வாசகர்கள் தேடிப்பார்க்க வேண்டும்

ad

ad