புதன், செப்டம்பர் 02, 2015

எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்புக்கு வழங்கப்பட வேண்டும்: மனோ கணேசன்


எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இரா.சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவது நாட்டின் அரசியலில் சிறந்த முன்னேற்றமாக அது அமையும்.
பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களை கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சியும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அரசாங்கம் ஒன்றை அமைக்க தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த 56 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கடிதம், ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர்.